வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமான நடிகை அனிதா ஹசானந்தனியின் லேட்டஸ் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.
2002ஆம் ஆண்டு வெளியான வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படத்தை ரவி சங்கர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் மகன், மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் அனிதா ஹசானந்தனி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இவருடன் குணால், நம்பியார், மயில்சாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘எங்கே அந்த வெண்ணிலா’ பாடலில் நடிகை அனிதா ஹசானந்தனி ரியாக்சன் ரசிகர்களை ஈர்த்தது. பல ஆண்களின் கனவு கன்னியாக வலம் வந்த அனித ஷசானந்தினிக்கு 2013-ம் ஆண்டு அவருக்கு ரோஹித் ஷெட்டி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். பல ஆண்டுகளாக எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருட்ந்த நிலையில் 2022-ல் வெளியான ‘மாரிச்’ என்ற இந்தி படத்தீன் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
மும்பையைச் சேர்ந்த அனிதாவுக்கு தற்போது 44 வயதாகிறது. சினிமாவில் ப்ரேக் எடுத்திருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடிகை அனிதா ஹசானந்தனியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் நடித்தவர் தானா?” என ஆச்சரியப்படுகிறார்கள். காலம் கடந்து ஒருவரை பார்க்கும்போது அவரது தோற்றத்தில் நிகழும் மாற்றங்க்ள பலருக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

Read more: இஸ்ரோவில் பணியாற்ற விருப்பமா..? செம வாய்ப்பு..!! மாதம் ரூ.56,000 சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!