தன்னுடன் பேச மறுத்த 14 வயது மாணவி மீது ஆசிட் வீசிய போட்டோகிராபர்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..!

girl abuse acid

ராஜஸ்தான் மாநிலத்தின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில், ஒரு 14 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெரியாத அந்நிய நபருடன் பேச மறுத்ததற்காகவும், அவனை திட்டியதற்காகவும் பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.


9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், சுபாஷ் பார்க் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.. அப்போது, ஓம்பிரகாஷ் என்ற இளைஞர், அவள் மீது ஒரு பாட்டிலில் இருந்த அமிலத்தை வீசி உள்ளார்.. எனினும் அதிர்ஷ்டவசமாக, அந்த அமிலம் அந்த மாணவியின் உடைகளையே அதிகமாக எரித்தது. அவளது கையில் ஒரு விரலில் மட்டும் தீக்காயம் ஏற்பட்டது. இதனால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது..

போலீஸ் விசாரணையில், குற்றவாளி ஓம்பிரகாஷ் என்றும், சந்திராரம் மேகவால் என்பவரின் மகன் என்றும் அடையாளம் காணப்பட்டது. விசாரணையில் அவர் கூறியதாவது, ஒரு திருமண நிகழ்ச்சியில் புகைப்படக்காரராக வேலை செய்தபோது, முதன்முறையாக அந்த மாணவியை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், அந்த மாணவியை தொடர்பு கொள்ள முயன்றபோது, மாணவி அவரை கண்டித்ததாகவும், அது அவரது அகம்பாவத்தை காயப்படுத்தியதாகவும் போலீஸ் தெரிவித்தது. இதனால் சிறுமியை பழிவாங்க முடிவு செய்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

சம்பவம் நடந்த அன்று, பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த அந்த மாணவியை வழிமறித்து, அமிலம் நிரம்பிய பாட்டிலை அவள்மீது வீசி, உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகவும், தன்னை அடையாளம் காண முடியாதபடி பல ஏற்பாடுகள் செய்திருந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது. அவர் தனது முகத்தை துணியாலும், ஹெல்மெட்டாலும் மூடியிருந்தார். மேலும், பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் எண்ண்பலகையை துணியால் சுற்றி மறைத்திருந்ததாகவும தெரிவித்துள்ளனர்.. குற்றவாளி, ஒருதலைக்காதல் காரணமாக ஏற்பட்ட விரக்தியால் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..

சிசிடிவி காட்சிகள் மற்றும் பரிசு அறிவிப்பு

இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தாலும், குற்றவாளி முகத்தை மறைத்திருந்ததால் அடையாளம் காணுவது கடினமாக இருந்தது. போலீசார் பல இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தொழில்நுட்ப தகவல்களும், உள்ளூர் உளவுத் தகவல்களும் உதவியுடன் அவரை கண்டுபிடித்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் அம்ரிதா துகான், குற்றவாளியை பிடிக்க உதவும் தகவல் வழங்குபவர்களுக்கு ரூ.25,000 பரிசு அறிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூன்று நாட்கள் தேடுதல் நடவடிக்கைக்கு பிறகு, திங்கட்கிழமை அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பிறகு, அவரை சந்தை வழியாக அழைத்து சென்றதாகவும், இதன் மூலம் சட்டத்தின் ஆட்சி நிலைபெறும் என்றும், இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Read More : நீங்கள் இதை செய்தால், உங்கள் பணம் நிச்சயம் இரட்டிப்பாகும்…! 5 ஆண்டுகளில் ரூ. 4.5 லட்சம் வட்டி கிடைக்கும்..

RUPA

Next Post

குட்நியூஸ்..! எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவது ரொம்ப ஈஸி..! மாதம் வெறும் ரூ. 1,999 செலுத்தினால் போதும்..!

Tue Jan 20 , 2026
நீங்கள் ஒரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், உங்களுக்காக ஒரு நல்ல செய்தி இதோ. பஜாஜ் ஃபைனான்ஸ் ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்துள்ளது. இப்போது நீங்கள் எளிதாக ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம். அது எப்படி என்று யோசிக்கிறீர்களா? ஆனால் இதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். கைனடிக் வாட்ஸ் அண்ட் வோல்ட்ஸ் நிறுவனம் சமீபத்தில் சில்லறை நிதி வசதியை ஒருங்கிணைத்து வழங்கியுள்ளது. இதற்காக, ஹீரோ ஃபின்கார்ப் நிறுவனம் […]
electric scooter

You May Like