தவெகவில் வெடித்தது அதிகார மோதல்..!! விஜய் கார் முன் பாய்ந்த பெண் நிர்வாகி அஜிதா..!! பின்னணி என்ன..?

TVK 2025 1

தமிழக வெற்றிக் கழகத்தில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல், பனையூர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு அதிரடிப் போராட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த கட்சியின் முக்கிய நிர்வாகி அஜிதா, தலைமையகத்தின் முன்பாக திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.


போராட்டம் உச்சகட்டத்தை எட்டியபோது, கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த தலைவர் விஜய்யின் காரை மறித்து அஜிதா தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய முயன்றார். இந்த எதிர்பாராத கார் மறியல் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளான சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் உடனடியாக களமிறங்கி, அஜிதாவிடம் சுமூகப் பேச்சுவார்த்தை நடத்தினர். தலைமையின் கோரிக்கையையும், சமாதானத்தையும் ஏற்றுக்கொண்ட அவர், தனது தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜிதா, “கட்சிப் பதவி கிடைக்காத ஆதங்கத்தில் உணர்ச்சிவசப்பட்டேன். ஆனால், என் இறுதி மூச்சு உள்ளவரை தமிழக வெற்றிக் கழகத்திலேயே பயணிப்பேன். கட்சித் தலைமை மற்றும் தளபதி விஜய் மீது எனக்குத் துளியும் ஐயமில்லை, முழு நம்பிக்கை உள்ளது” எனக் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Read More : உஷார்..!! இந்த 3 செயலிகள் உங்கள் போனில் இருக்கா..? வங்கிக் கணக்கு காலி ஆகலாம்..!! அரசு எச்சரிக்கை..!!

CHELLA

Next Post

பான் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய எச்சரிக்கை.. இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளன.. தவறினால் ரூ. 1,000 அபராதம்!

Wed Dec 24 , 2025
PAN cards that are not linked with Aadhaar cards will become inactive from January 01, 2026.
pan aadhar

You May Like