விஜய் குறித்த கேள்வி.. ஒரே வரியில் ‘நச்’ பதில் சொன்ன உதயநிதி! என்ன இப்படி சொல்லிட்டாரு..!

vijay udhayanidhi 1

தவெக தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.. திமுகவை கடுமையாக விமர்சித்த அவர் “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா மேடமும் ஒரே வார்த்தையில் திமுகவை காலி செய்தனர்.. ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்று யோசிப்பேன்.. அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன்.. திமுக ஒரு தீய சக்தி என பல முறை ஆக்ரோஷமாக முழங்கினார் விஜய்..


திமுக தீய சக்தி என ஜெயலலிதா கூறியது சரிதான்.. திமுக ஒரு தீய சக்தி.. தவெக ஒரு தூய சக்தி.. தீய சக்தியான திமுகவுக்கும் தூய சக்திக்கும் தான் போட்டியே.. நம்பிக்கை உடன் இருங்க.. வெற்றி நிச்சயம்..” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. திமுகவை தீயசக்தி என்று விஜய் விமர்சித்தது குறித்து உங்கள் கருத்து என்ன செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த உதயநிதி “ என்றாவது விஜய்யிடம் கேள்வி கேட்டிருங்கீங்களா? விஜய்யை பேசிவிட்டு பாருங்கள்.. அப்ப தெரியும்..” என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டார்..

Read More : ஈரோடு மக்கள் சந்திப்பு இதுவரை இல்லாத மகிழ்ச்சி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.. நன்றி தெரிவித்து விஜய் பதிவு..!

RUPA

Next Post

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை...! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி

Fri Dec 19 , 2025
மதுரையில் பட்டதாரி இளைஞர் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட் அருகே சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் புறக்காவல் நிலையம் செயல்படுகிறது. இங்கு சுழற்சி முறையில் ஓரிரு போலீஸார் பணியில் இருப்பது வழக்கம். இந்நிலையில், அங்கு நேற்று போலீஸார் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. நேற்று மாலை அவ்வழியாக ஆட்டோ […]
madurai death 2025

You May Like