iPhone தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் (Apple Inc.) நிறுவனம் அமெரிக்காவில் தனது விற்பனைத் துறையில் பணியாற்றும் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது என Bloomberg நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.. ஆப்பிள் நிறுவனத்தில் பணிநீக்கம் அரிதாக நடைபெறும் என்பதால் இந்த முடிவு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கம்பெனி, நிறுவனங்கள், அரசாங்க அமைப்புகள், கல்வி நிறுவனங்களுக்கு
தனது தயாரிப்புகளை வழங்கும் முறையை மறுபரிசீலனை செய்து, எளிமைப்படுத்த முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது…
ஆப்பிள் நிறுவனத்தின் பதில்
ஆப்பிள் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் இதுகுறித்து பேசிய போது “ விற்பனைத் துறையில் “மாற்றங்கள்” செய்யப்படுகின்றன. இதனால் சில பணியிடங்கள் பாதிக்கப்படுகின்றன. ஆனால் நிறுவனம் தொடர்ந்து புதிய பணியாளர்களை நியமிக்கவும் செய்யும். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நிறுவனத்தின் பிற பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆஸ்திரேலியா–நியூசிலாந்திலும் பணிநீக்கம்
சில வாரங்களுக்கு முன்பும், ஆப்பிள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து விற்பனை அணிகளில் இருந்து சுமார் 20 பணியிடங்களை நீக்கியது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன…
ஆப்பிள் பணிநீக்கம்: யார் பாதிக்கப்பட்டுள்ளனர்?
ஆப்பிள் நிறுவனத்தின் பல பிரிவுகளில் டஜன் கணக்கான விற்பனைத் துறை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சில அணிகள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மேலாளர்கள் அவர்களுக்கு இந்த தகவலை அறிவித்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பணியாளர்கள் யார்?
பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில், பள்ளிகள், அரசு அமைப்புகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களை கவனித்த அக்கவுண்ட் மேனேஜர்கள் அடங்குவர். அதேபோல் பெரிய வாடிக்கையாளர்களுக்கான தயாரிப்பு அறிமுக நிகழ்வுகள், முக்கிய நிறுவனக் கூட்டங்கள் நடைபெறும் Apple briefing center-களில் பணியாற்றிய ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏன் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது?
பல ஊழியர்கள் இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. ஏனெனில் ஆப்பிள் மிகச் சில நேரங்களில் மட்டுமே பணிநீக்கம் செய்யும் நிறுவனம் ஆகும். மேலும் இப்போது ஆப்பிள் வரலாற்றிலேயே மிக உயர்ந்த வருவாயை எட்டிக்கொண்டிருக்கிறது. டிசம்பர் காலாண்டில் மட்டும் நிறுவனம் $140 பில்லியன் வருவாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தயாரிப்புகள் வெற்றிகரமாக வெளியானதும் வருவாய் உயர்வுக்கு காரணமாக உள்ளது.
ஆனால் பாதிக்கப்பட்ட சிலர் பேசிய போது “ Apple நிறுவனம் விற்பனையின் பெரும்பகுதியை third-party resellers (அனைத்துத் துறைகளுக்கும் பொருட்கள் விற்பனை செய்யும் வெளியக நிறுவனங்கள்) மூலம் மேற்கொள்ள திட்டமிட்டதே இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணம். சில நிறுவனங்கள் நேரடியாக ஆப்பிள் உடன் செயல்படும் விட, இந்த resellers உடன் வேலை செய்ய விரும்புகிறார்கள். இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் உள்துறை செலவுகள் (ஊதியம் போன்றவை) குறைய வாய்ப்பு அதிகம்.
ஆப்பிள் நிறுவனத்தில் பணிநீக்கம்: ‘கடைசி வழி’ என்றாலும் ஏன் இப்போது?
ஆப்பிள் நிறுவனம் பொதுவாக பிற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களைப் போல அடிக்கடி பணிநீக்கம் செய்வது இல்லை. CEO டிம் குக் இதற்கு முன்பு, பணிநீக்கங்கள் என்பது “கடைசி முடிவு” என்று தெரிவித்துள்ளார். ஆனால் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் ஆப்பிள் சில துறைகளில் திட்டமிட்டபடி பணியாளர்களை குறைத்து வருகிறது.
ஆப்பிள் நிறுவனம் பணிநீக்கம் செய்வது எப்படி?
Apple ஒரு குழுவை நேரடியாக முழுமையாக நீக்காமல், US labor law-இல் உள்ள WARN notice வழங்க வேண்டிய நிலை வராமல் இருக்கும்படி மிக கவனமாக திட்டமிட்டு பணிநீக்கம் செய்கிறது. இதனால் பெரிய அளவில் ஒரே நேரத்தில் வேலை இழந்தது போல் வெளிப்படையாக தெரியாது.
மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் நிலை எப்படி?
Apple-ஐ விட பிற தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிநீக்கம் இன்னும் அதிகமாக இருக்கிறது:
Amazon — இந்த மாதம் 14,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
Meta (Facebook, Instagram, WhatsApp நிறுவனம்) — அதன் AI பிரிவில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் நீக்கப்பட்டனர்.
இதனால், ஆப்பிள் பணிநீக்கங்கள் குறைவாக இருந்தாலும், தற்போதைய பொருளாதார சூழலில் இது தவிர்க்க முடியாத முடிவாக மாறியுள்ளது



