தஞ்சாவூர் மாவட்டம் திருப்பேர் நகரில் அமைந்துள்ள கோவிலடி அப்பக்குடத்தான் கோவில் 108 திவ்ய தேசங்களில் 6-வது தலம். பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் மற்றும் திருமழிசையாழ்வார் இத்தலத்திற்கு மங்களாசாசனம் செய்துள்ளனர். இந்த கோவில் தனிச்சிறப்பாக பெருமாள் குடத்துடன் காட்சி தருகிறார், மார்கண்டேயருக்கு எம பயம் போக்கிய தலம் என விளங்குகிறது. அதே நேரத்தில், இரவில் பெருமாளுக்கு அப்பம் பிரசாதம் செய்யும் பழக்கம் பக்தர்களை ஈர்க்கிறது.
இத்தலத்தில் பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவியுடன் மேற்கு நோக்கி படி புஜங்க சயன கோலத்தில் காட்சி தருகிறார். தனது வலது கரத்தில் ஒரு குடத்தை தாங்கிய நிலையிலும் பெருமாள் காட்சி தருகிறார். மூன்று நிலை ராஜ கோபுரத்தை கொண்ட இக்கோவில் ஆதித்ய சோழன் காலத்தில் கட்டப்பட்டது என சொல்லப்படுகிறது.
வரலாறு: முன்னொரு காலத்தில் உபமன்யு மன்னன் துர்வாச முனிவரின் கோபத்தால் பலத்தை இழந்தார். இத்தலத்தில் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் செய். இந்த தானத்தின் மூலம் உனது சாபம் தீரும்” என்றார் முனிவர்.
முனிவர் சொன்னபடி அன்னதானமும் செய்து வந்தான். ஒரு நாள் திருமால், வயது முதிர்ந்த அந்தணர் உருவில் வந்து அன்னம் கேட்டார். மன்னனை சோதிக்க விரும்பிய திருமால், அன்றைய பொழுது தயாரிக்கப்பட்ட அனைத்து உணவு வகைகளையும் உண்டு தீர்த்தார். அதன் பின்னர் மீண்டும் உணவு கேட்டார். மன்னனும் உடனே தயார் செய்து கொடுப்பதாகக் கூறினான்.
இனி உணவு தயாரிக்க நேரமாகும் என்றும் தன்னால் அவ்வளவு நேரம் பசி பொறுக்க முடியாது என்றார் முதியவர். வேறு என்ன செய்வது மன்னர் யோசனை செய்யும்போதே முதியவர் தனக்கு ஒரு குடம் அப்பம் வேண்டும் என்று கேட்டார். அதன்படி அப்பம் அவருக்கு அளிக்கப்பட்டது. அந்த அப்பக் குடத்தை திருமால் வாங்கிய வேளையில், மன்னனின் சாபம் தீர்ந்தது. இதனால் மன்னன் மனம் மகிழ்ந்தான். மன்னனிடம் இருந்து அப்பக்குடத்தை, திருமால் பெற்றதால் இவருக்கு ‘அப்பக்குடத்தான்’ என்ற பெயர் வழங்கலாயிற்று
புரட்டாசி, நவராத்திரி, மார்கழி வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திர உற்சவத்தில் திருத்தேர் விழா நடைபெறும். பக்தர்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபட்டு, எமபயம் நீங்க, கர்வம் தீர, சாபம், பாவம் நீங்க, குழந்தை பாக்கியம் பெறுவது போன்ற பல நன்மைகளை பெற்றுக்கொள்கின்றனர்.
இத்தலம் பிரார்த்தனை, ஆன்மிக நம்பிக்கை மற்றும் வரலாற்று கதைகளின் செறிவு கொண்டு, பக்தர்களின் மனதில் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது. அப்பக்குடத்தான் கோவில் 108 திவ்ய தேசங்களில் வரலாற்றின் மங்கைத் தலம் என்ற வரலாற்றுப் பெருமையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
Read more: வயர்கள் இல்லாமல் வைஃபை எப்படி வேலை செய்கிறது? 99% பேருக்கு இந்த தொழில்நுட்பம் தெரியாது.!



