திருவிழாவுக்கு வந்த உறவுக்கார சிறுமி..!! தனியாக கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம்..!! தஞ்சையில் திடுக்கிட வைக்கும் சம்பவம்..!!

Child Rape 2025

தஞ்சாவூர் அருகே கோயில் விழாவிற்கு வந்த உறவுக்கார சிறுமியை வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப்கண்ணன் (24). இவர், தஞ்சாவூர் அருகே நடைபெற்ற கோயில் விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அதேபோல, தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமியும் அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். சிறுமியும், பிரதீப்கண்ணனும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில், அந்தச் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறிப் பிரதீப்கண்ணன் அவரைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, நடந்த கொடூரம் குறித்து தனது குடும்பத்தினரிடம் அழுது தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர், உடனடியாக வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் பிரதீப்கண்ணனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் பிரதீப்கண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read More : திருப்பதி சென்றால் முதலில் எந்த கடவுளை வணங்க வேண்டும் தெரியுமா..? அடுத்த டைம் போகும்போது மறந்துறாதீங்க..!!

CHELLA

Next Post

உறுப்பினர் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு 100% கடன் உத்தரவாத காப்பீடு...!

Thu Nov 13 , 2025
உறுப்பினர் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு 100% கடன் உத்தரவாத காப்பீட்டை வழங்குவதற்காக, ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) உட்பட தகுதியான ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.20,000 கோடி வரை கூடுதல் கடன் வசதிகளை வழங்க முடியும். செயல்படுத்தல் உத்தி மற்றும் இலக்குகள்:குறு, சிறு […]
modi money

You May Like