“ஷாருக்கானின் நாக்கை வெட்டுபவருக்கு ரூ. 1 லட்சம் பரிசு..” இந்து மகாசபை தலைவர் கருத்தால் சர்ச்சை..!

SRK Meera Rathor 1

வங்கதேச வீரர்களை ஐபிஎல் அணிகளில் சேர்த்ததற்கு எதிராக சில இந்து அமைப்புகள் காட்டி வரும் கோபம், தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக் கானை குறிவைக்கும் புதிய சர்ச்சையாக மாறியுள்ளது. சமீப காலமாக வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடக்கும் தாக்குதல்களை முன்னிட்டு, ஷாருக் கானுக்கு எதிராக போராட்டங்கள் எழுந்துள்ளன.


மீரா ரத்தோர் வெளியிட்ட சர்ச்சை அறிவிப்பு

அக்ராவில், அகில இந்திய இந்து மகாசபையின் மாவட்டத் தலைவர் மீரா ரத்தோர், “ஷாருக் கானின் நாக்கை கொண்டு வருபவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்” என்று அறிவித்தார். இந்த கருத்தை அவர் மதுராவில் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறினார். அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.. அங்கு நடைபெற்று வரும் அனிருத்த ஆச்சார்ய மகாராஜ் வழக்கு தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யச் சென்றிருந்தபோது, அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். மேலும் ஷாருக் கானின் போஸ்டரை கருப்பு மை பூசி, செருப்பால் அடித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய மீரா ரத்தோர் “வங்கதேசத்தில் எங்கள் இந்து சகோதரர்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். ஆனால் இந்த மனிதன் (ஷாருக் கான்) அவர்களையே வாங்கி உள்ளூர் மக்களுக்கு உணவாக வழங்குகிறார். இன்று நான் அவரது முகத்தில் கருப்பு மை பூசி, செருப்பால் அடித்தேன். எங்கள் சகோதரர்களுக்கு இப்படிப் பாதிப்பு ஏற்பட்டால், நாங்கள் விடமாட்டோம். அவரின் நாக்கை வெட்டிக் கொண்டு வருபவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்குவோம்” என்று கூறினார்.

வங்கதேச வன்முறை பின்னணி

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தொடர்ச்சியாக நடைபெறும் வன்முறைகள் காரணமாக, இந்தியாவில் பல அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. அந்த பின்னணியிலேயே இந்த சர்ச்சையான கருத்துகள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரத்தில் மீரா ரத்தோர் மட்டும் அல்ல, இதற்கு முன்பும் சில இந்து அமைப்புகள் மற்றும் தலைவர்கள் நடிகர் ஷாருக்கான் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். குறிப்பாக, ஆன்மிக சொற்பொழிவாளர் தேவகி நந்தன் தாக்கூர் மற்றும் பாஜக தலைவர் சங்கீத் சோம் ஆகியோர் அவரை எதிர்த்து கருத்துகள் தெரிவித்துள்ளனர். சிலர், அவரை “தேசத் துரோகி” எனக் கூட அழைக்கும் அளவுக்கு கருத்துகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், இதுவரை பாஜக அல்லது மற்ற முக்கிய அரசியல் தலைவர்கள் இந்தப் பேச்சு குறித்து எந்த அதிகாரப்பூர்வ பதிலையும் வெளியிடவில்லை.

சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்த கலவரங்களில் பல இந்துக்கள் கொல்லப்பட்டதாக வரும் தகவல்களைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள பல இந்து அமைப்புகள் அரசின் தலையீட்டை கோரியுள்ளன. ஆரம்பத்தில் இந்தப் போராட்டங்களில் ஷாருக்கான் நேரடியாக தொடர்புடையவராக இல்லை. ஆனால், அவரது ஐபிஎல் அணியில் வங்கதேச வீரர்கள் இடம் பெற்றிருப்பதால், தற்போது அவர் இந்த சர்ச்சையின் மையமாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : “பாரதத்தின் எதிர்காலத்திற்கு பேராபத்து..” சீன படைகள் குறித்து பலூச் தலைவர் இந்தியாவுக்கு எச்சரிக்கை..!

RUPA

Next Post

இல்லத்தரசிகளே.. உஷார்..! சிக்கனை இந்த முறையில் சமைக்காதீங்க; மிகவும் ஆபத்தானது!

Fri Jan 2 , 2026
கோழி இறைச்சி அல்லது சிக்கன் பலருக்கும் பிடித்தமான ஒரு உணவு. கோழி இறைச்சியிலிருந்து பலவிதமான உணவுகளைத் தயாரிக்கலாம். ஆனால், கோழி இறைச்சியை சமைக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் ஏற்படும் ஒரு சிறிய கவனக்குறைவு கூட ஆரோக்கியத்திற்குப் பெரிய ஆபத்தை விளைவிக்கும். குறிப்பாக கோழி இறைச்சியை சமைக்கும்போது நாம் செய்யும் பொதுவான தவறுகள், பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழைந்து உணவு நஞ்சாவதற்கு வழிவகுக்கும். இதனால் வயிற்று வலி, வாந்தி, […]
skin chicken

You May Like