திரைப்படங்களை மிஞ்சும் கொள்ளை..!! சுரங்கம் தோண்டி சுரண்டி எடுத்த நகைகள்..!! அதிர்ச்சியில் போலீஸ்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நகைக்கடையில் புகுந்து கொள்ளையடிக்க சுமார் 10 அடி நீளத்திற்கு கொள்ளையர்கள் சுரங்கம் தோண்டியுள்ளது ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பியுஷ் கார்க் என்பவர் நடத்தி வந்த நகைக்கடையில் தான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் தனது கடையை திறக்க பியுஷ் கார்க் சென்றுள்ளார். ஆனால், கடையை திறந்து பார்த்தபோது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடையில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. பின்னர், நாவுசாண்டி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.


விசாரணையில், கொள்ளையர்கள் நகைக்கடைக்குள் நுழைவதற்காக சுமார் 10 அடி நீளமுள்ள சுரங்கத்தையே பூமிக்கு அடியில் தோண்டியது தெரியவந்தது. அதாவது, அந்த நகைக்கடைக்குள் செல்லும் சாக்கடைக் குழாயை சுரங்கம் தோண்ட தேர்வு செய்துள்ளனர். சாக்கடைக்குழாயின் சுவர்கள் மிகவும் பலவீனமாக இருந்துள்ளது. அதனால், அதில் இருந்த செங்கற்களை முதலில் எடுத்துவிட்டு பின்னர் மண்ணை கொள்ளையர்கள் தோண்டியுள்ளனர். திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலைக்கு முன்பாக நகைக்கடைக்குள் சென்று தங்கள் திட்டத்தை அரங்கேற்றி முடித்துள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

CHELLA

Next Post

கர்ப்பிணிப் பெண்கள், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதித்த வடகொரியா.. வெளியான பகீர் தகவல்..

Fri Mar 31 , 2023
வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது.. அங்கு சிறிய தவறுகளுக்கு கூட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.. மேலும் அங்கு பல விசித்திரமான சட்டங்களும், விதிகளும் நடைமுறை உள்ளன.. இந்நிலையில் வடகொரியாவில் வழங்கப்படும் கொடூர தண்டனைகள் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மரணதண்டனை, ஆபத்தான மனித பரிசோதனைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை செய்தல் உள்ளிட்ட கொடூரமான […]
69297071 0 image a 28 1680191644216

You May Like