திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அனந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல்(27). ஆரணியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.. இவரது மனைவி தமிழ்பிரியா. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே வடிவேலுவுக்கு, பக்கத்து ஊரை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் 16 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலித்து வந்துள்ளார்.
இந்த விஷயம் மாணவியின் பெற்றோருக்கு தெரிந்து, வடிவேலுவுடன் பழகுவதை நிறுத்திவிடுமாறு மகளை கண்டித்துள்ளனர்.. ஆனாலும், மாணவி அவர்களது பேச்சை கேட்கவில்லை.. உடனே இந்த விஷயம் ஊர் பெரியவர்கள் வரை சென்றிருக்கிறது.. அவர்களும் மாணவிக்கும், வடிவேலுவுக்கும் புத்தி சொல்லி உள்ளார்கள். அப்போதுகூட இருவரும் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் அப்பா சங்கர்(46), வடிவேலை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
மாணவியின் அப்பா சங்கரௌம் உறவினர் சிவஞானம் (48) என்பவரும் வடிவேலுவை கொலை செய்ய காத்து கொண்டிருந்தார். பைக்கில் சென்ற வடிவேலுவை வழிமறித்த சங்கர், தன்னுடைய மகளுடன் பழகுவதை கைவிட வேண்டும் என்று சொல்லி உள்ளார்.. இதனால் சங்கருக்கும் வடிவேலுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சங்கரும், சிவஞானமும் வடிவேலை கட்டையாலும், கற்களாலும் சரமாரி தாக்கி உள்ளனர். இதில் வடிவேல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வடிவேலுவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் சங்கர், சிவஞானம் ஆகியோரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



