தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகள்.. சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி.. பெரும் சோகம்..!

accident

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கோழித்தீவனம் ஏற்றி சென்ற லோடு லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.. லோடு லாரி பள்ளத்திற்குள் பாய்ந்ததில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் மற்றும் ஓட்டுநர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. மாடுகள் சாலையை கடந்த போது லாரியில் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது..


இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. உயிரிழந்த இருவரின் உடல்கள் மீட்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபப்ட்டது.. இந்த விபத்து அறிந்து ஊர் மக்கள் அங்கு கூடியதலா அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது..

இதனிடையே சென்னை பூவிருந்தவல்லியில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர்கள் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்த விபத்தில் சென்னீர்குப்பத்தை சேர்ந்த இளைஞர்கள் சந்தோஷ், நிர்மல் ஆகியோர் உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் தகவலறிந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Read More : “என் உடலில் ஓடும் ரத்தம் விஜய்க்கு தான்.. வழி தெரியாமல் இருந்த எனக்கு வழிகாட்டியவர்..” செங்கோட்டையன் உருக்கம்..!

RUPA

Next Post

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்! பொங்கலுக்கு வங்கிக்கணக்கில் பணம்..! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Sat Dec 27 , 2025
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு, புதுச்சேரியில் வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.. பச்சரிசி, சர்க்கரை, கருப்பு ஆகியவற்றுடன் சில ஆண்டுகளில் ரொக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் புதுச்சேரியில் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் […]
puducherry ration card money

You May Like