திருட வந்த இடத்தில் சில்மிஷம்..!! தூக்கத்தில் இருந்த பெண்ணின் நைட்டியை கிழித்து பாலியல் அத்துமீறல்..!! குமரியில் ஷாக்கிங் சம்பவம்..!!

Theft 2025

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தில், கொள்ளையடிக்க வந்த இளைஞன் ஒருவன், வீட்டில் தனியாகத் தூங்கிக்கொண்டிருந்த மீனவரின் மனைவியை சில்மிஷம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று இரவு, அப்பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் மீன்பிடி வேலைக்காகக் கடலுக்குச் சென்றிருந்தார்.


இதனால், அவரது 36 வயதுடைய மனைவி மட்டும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை நேரத்தில், ஒரு வாலிபர் வீட்டின் மேல்மாடி கதவின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளான். வீட்டுக்குள் புகுந்த அவர், முதலில் பீரோவைத் திறந்து பணம், நகை போன்ற விலை உயர்ந்த பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா என்று தேடியுள்ளார். ஆனால், எதுவும் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

இதையடுத்து, அந்த வாலிபர் மற்றொரு அறைக்குள் நுழைந்தபோது, அங்கே மீனவரின் மனைவி கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்ததை கண்டான். கொள்ளையடிக்கும் நோக்கத்தை மறந்த அந்த வாலிபனுக்குப் பெண் மீது சபல புத்தி தோன்றியது. தான் கொண்டு வந்திருந்த கத்தரிக்கோலால் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் நைட்டியை வெட்டி எடுத்து அவர் சில்மிஷம் செய்ய துணிந்தார்.

திடீரென கண்விழித்த அந்தப் பெண் அதிர்ச்சியடைந்து, தனது கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியைப் பறிக்க முயன்ற அந்த வாலிபரிடமிருந்து தப்பி, ‘திருடன்… திருடன்…’ என்று சத்தமாகக் கூச்சலிட்டார். இதனால் பயந்துபோன வாலிபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடினார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, தப்பி ஓடிய வாலிபரைப் பிடிக்க முயன்றும் முடியவில்லை.

உடனடியாக அந்தப் பெண் குளச்சல் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, குடியிருப்புப் பகுதியில் பதுங்கி இருந்த அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில், அவர் கீழமுட்டம் பகுதியைச் சேர்ந்த சகாயஜோஸ் (வயது 24) என்பதும், அவர் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் வந்து, பிறகு பெண் மீது சில்மிஷம் செய்ய முயன்றதையும் ஒப்புக்கொண்டார். தான் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாகவும், குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாக ஆசைப்பட்டு திருட்டுத் தொழிலில் ஈடுபட்டதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார். சம்பவத்தன்று, வீட்டின் முன் ஆண்கள் அணியும் செருப்பு இல்லாததால், கணவர் வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டே கொள்ளையடிக்க வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சகாயஜோஸைக் கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சகாயஜோஸ் மீது ஏற்கனவே மணவாளக்குறிச்சி, வெள்ளிச்சந்தை காவல் நிலையங்களில் 8 திருட்டு வழக்குகளும், குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் 2 போக்சோ வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : இனி இதை மட்டும் தூக்கிப் போடாதீங்க..!! புற்றுநோய் செல்களை அழிக்கும் மாயாஜால பொடி..!! வீட்டிலேயே தயாரிக்கலாம்..!!

CHELLA

Next Post

மதியம் அதிகமாக தூக்கம் வருகிறதா? ஜாக்கிரதை, இது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்!

Tue Oct 7 , 2025
வீடு, அலுவலக வேலையின் சலசலப்பில் சோர்வடைந்த பலர், மதியம் ஒரு சிறிய தூக்கம் எடுக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இது ‘பவர் நாப்’ என்று அழைக்கப்படுகிறது. மதிய உணவுக்குப் பிறகு பலர் தூங்குவதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர்.. குறிப்பாக மதியம் 1 மணி முதல் 4 மணி வரை, அவர்களுக்கு இந்தப் பழக்கம் உள்ளது. இந்தப் பழக்கம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உடலுக்கு ஓய்வையும் தருகிறது. ஆனால் இந்தக் குறுகிய தூக்கம் தேவைக்கு […]
sleep n

You May Like