கோவை மாணவி வழக்கில் திடுக்கிடும் திருப்பம்..!! அரைகுறை ஆடையுடன் காதலனுக்காக செய்த செயல்..!!

Kovai 2025 1

கோவையில் 3 வாலிபர்களால் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 20 வயது கல்லூரி மாணவி வழக்கில் தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


கடந்த நவம்பர் 2ஆம் தேதி இரவு, கோவை சித்ரா சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில், மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி, கோவையைச் சேர்ந்த தனது காதலனுடன் காரில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த 3 வாலிபர்கள், மாணவியின் காதலனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, மாணவியை மறைவான இடத்துக்கு தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

வன்கொடுமைக்கு ஆளான மாணவி, அரைகுறை ஆடையுடன், தட்டுத்தடுமாறி எழுந்து, அங்கிருந்த மதில் சுவரை ஏறி குதித்து அருகில் இருந்த குடியிருப்புப் பகுதியை நோக்கிச் சென்றுள்ளார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டின் கதவைத் தட்டியும், காலிங் பெல்லை அழுத்தியும் உதவி கிடைக்காத நிலையில், முதல் தளத்தில் உள்ள ஒரு வீட்டின் கதவைத் தட்டி உதவி கோரியுள்ளார். அங்குள்ள மக்கள் கதவைத் திறக்க, அலங்கோலமான நிலையில் நின்ற மாணவியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களிடம் நடந்த கொடூரத்தை சொல்லி மாணவி கதறியுள்ளார்.

உடனடியாக அங்கு கூடிவந்த மற்ற குடும்பத்தினரும், மிகவும் சோர்ந்து போயிருந்த அந்த மாணவியை அரவணைத்து, “தற்போது நீ பாதுகாப்பாக இருக்கிறாய்” என்று ஆறுதல் கூறி, உடை கொடுத்து உதவியுள்ளனர். மாணவி தனது பெற்றோரிடம் பேச வேண்டும் என்று கூறியதன் பேரில், குடியிருப்புவாசிகள் அவருக்கு தொலைபேசி மூலம் உதவினர். பெற்றோரிடம் பேசிய மாணவி, நடந்த கொடூரத்தையும், வாலிபர்கள் தன் காதலனை தாக்கியதையும் கூறி, அவரைக் காப்பாற்றும்படி கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் மாணவியின் காதலனைத் தேடிச் சென்றுள்ளனர். அதற்குள், தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்திருந்த போலீஸார், ஏற்கனவே மாணவியின் காதலனை மீட்டு விசாரித்துக் கொண்டிருந்தனர். அவரைச் சிகிச்சைக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் இருந்த போலீஸார், காணாமல் போன மாணவியையும் தேடிக் கொண்டிருந்தனர். பின்னர், குடியிருப்புவாசிகள் அளித்த தகவலின் பேரில் மாணவியை மீட்ட போலீஸார், அவரையும் அவரது காதலனையும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி (30), அவரது சகோதரர் காளி (எ) காளீஸ்வரன் (21), மற்றும் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த குணா (எ) தவசி (20) ஆகிய மூன்று வாலிபர்களையும் துப்பாக்கியால் சுட்டு போலீஸார் கைது செய்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் பொது அறுவை சிகிச்சை வார்டுக்கு மாற்றப்பட்டனர்.

இதற்கிடையே, போலீஸாரின் மனுவைத் தொடர்ந்து, கோவை ஜெ.எம்.2 நீதிபதி அப்துல் ரகுமான் மருத்துவமனைக்குச் சென்று, சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில், மூவரையும் வரும் 19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவியிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார்.

Read More : துளசி இலைகளை பறிப்பதில் கூட இவ்வளவு விஷயம் இருக்கா..? இந்த நாளில் தொடவே தொடாதீங்க..!!

CHELLA

Next Post

மூன்று சிறந்த புதிய கண்டுபிடிப்புகளை நாட்டிற்கு பரிசாக வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி...!

Thu Nov 6 , 2025
டெல்லியில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் மாநாட்டின்போது மூன்று தலைசிறந்த புதிய கண்டுபிடிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு பரிசாக வழங்கி உள்ளார். இந்தியாவிற்கு சொந்தமான குவாண்டம் பாதுகாப்பு சிப் (QSIP), கணக்கீட்டின் எதிர்காலத்தை மேம்படுத்தும் இந்தியாவின் முதல் குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப் (25-qubit QPU) மற்றும் இந்தியாவின் முதல் உள்நாட்டு புற்றுநோய் செல் சிகிச்சை (CAR-T செல் சிகிச்சை) ஆகிய மூன்று […]
inventions 2025

You May Like