ஒருவரின் வாழ்க்கையில் தொடர்ந்து தடைகள் ஏற்பட்டால், அதற்கு பித்ரு தோஷம் ஒரு காரணமாக இருக்கலாம். மகாளய பட்ச காலத்தில், அதாவது செப்டம்பர் 21ஆம் தேதிக்குள், ஒரு நாள் மட்டுமாவது எளிய அன்னதானம் செய்வதன் மூலம் பித்ரு தோஷத்தை போக்கலாம். இந்த தானத்தை மதியம் 11.30 மணி முதல் 2.00 மணிக்குள் செய்வது மிகவும் சிறந்தது.
இந்த தானத்திற்காக, வீட்டில் பச்சரிசியை பயன்படுத்தி தயிர் சாதம் தயார் செய்ய வேண்டும். தயிர் சாதத்துடன் தொட்டுக்கொள்ள எலுமிச்சை ஊறுகாய் மற்றும் ஒரு பாட்டில் தண்ணீர் கொடுக்க வேண்டும். இதை குறைந்தபட்சம் 4 பேருக்காவது கொடுக்க வேண்டும். சொந்த கைகளால் தயார் செய்து தானம் அளிப்பது அதிக பலன் தரும்.
இந்த எளிய தானத்தின் மூலம், நம் முன்னோர்கள் மனம் மகிழ்ந்து நம்முடைய சாபங்களையும், தோஷங்களையும் நீக்குவார்கள். இதன் விளைவாக, நம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும், மகிழ்ச்சியும் உண்டாகும். மனநிறைவுடன் இந்த தானத்தை செய்து, முன்னோர்களின் முழு அருளையும் பெறுவோம்.
Read More : உங்கள் வேண்டுதல் அப்படியே நிறைவேற முருகப்பெருமானை இப்படி வழிபடுங்க..!! இந்த 3 பூக்கள் போதும்..!!