ஒரே முதலீடு வாழ்நாள் முழுவதும் பென்சன்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? எவ்வளவு பணம் கிடைக்கும்..?

Money Rupees

ஓய்வுக்குப் பின் யாருடைய உதவியும் இல்லாமல், சொந்தமாக வாழ்க்கையை நிர்வகிக்க வேண்டும் என்பது பல மூத்த குடிமக்களின் கனவாக உள்ளது. இந்தக் கனவை நனவாக்கும் வகையில், மத்திய அரசும், ஆயுள் காப்பீட்டுக் கழகமும் (LIC) இணைந்து செயல்படுத்தி வரும் ஒரு சிறப்பான திட்டம் தான் வரிஷ்தா பென்ஷன் பீமா யோஜனா (VPBY).


கடந்த 2015இல் தொடங்கப்பட்ட இத்திட்டம், மூத்த குடிமக்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிலையான மற்றும் உறுதியான வருமானத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்வதன் மூலம், வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறலாம்.

இந்த முதலீட்டிற்கு ஆண்டுக்கு 8% வட்டி கிடைக்கும். இந்த வட்டி விகிதம், பாலிசி காலம் முழுவதும், அதாவது 15 ஆண்டுகளுக்கு உறுதியானது. இது மற்ற சேமிப்புத் திட்டங்களை விட அதிக நன்மை கொண்டது. முதலீட்டாளர்கள் தங்கள் விருப்பப்படி மாதம், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் ஓய்வூதியம் பெறும் முறையை தேர்வு செய்யலாம்.

பாலிசியில் சேர்ந்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலீடு செய்த தொகையில் 75% வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். மேலும், ஓய்வூதியதாரருக்கோ அல்லது அவரது மனைவிக்கோ மருத்துவச் செலவுகளுக்குப் பணம் தேவைப்பட்டால், 15 வருட முதிர்வு காலத்திற்கு முன்பே திட்டத்திலிருந்து விலகிக் கொள்ளலாம். அவ்வாறு விலகும்போது, முதலீட்டுத் தொகையில் 98% திருப்பித் தரப்படும்.

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை, நீங்கள் தேர்ந்தெடுக்கும் பென்சன் முறையைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக, மாத ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் ரூ.63,960 முதலீடு செய்ய வேண்டும். ஒருவரால் அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். இத்திட்டத்திற்கு வரி விலக்கும் உண்டு.

திட்டத்தில் இணைவது எப்படி..?

இந்த திட்டத்தில் சேர விரும்புவோர், அருகிலுள்ள எல்.ஐ.சி. கிளையை நேரில் அணுகி விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதனுடன் ஆதார் அட்டை, பான் கார்டு, வயது சான்று மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியத் தொகையானது ECS அல்லது NEFT மூலம் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். நிலையான மற்றும் பாதுகாப்பான வருமானத்தை எதிர்பார்க்கும் மூத்த குடிமக்களுக்கு, இந்தத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.

Read More : உங்கள் மீது பல்லி விழுந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்..? இது ஆபத்தை குறிக்கிறதா..?

CHELLA

Next Post

புதிய GST வரி விகிதம்... விவசாயிகளுக்கு அதிக அளவில் பயன்...! மத்திய அமைச்சர் தகவல்...!

Mon Sep 8 , 2025
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள், வேளாண் துறையில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், வேளாண் உபகரணங்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டிருப்பதால், சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் லாபங்கள் அதிகரித்து, அவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் மத்திய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். போபாலில் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர், உயிரி- பூச்சிக்கொல்லிகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் முதலியவற்றின் […]
shivaraj 2025

You May Like