தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. டெல்லி லால் கிலா மெட்ரோ நிலைய நுழைவாயில் எண் 1 அருகே, மாலை 7 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் குறித்து டெல்லி தீயணைப்பு சேவைக்கு தகவல் கிடைத்தது.
இந்த வெடிப்பில் 10 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது, அதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் 12 பேர் காயமடைந்தனர். ஒரு காரில் குண்டுவெடித்த நிலையில், பல வாகனங்களும் தீப்பிடித்து சேதமடைந்தன. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி நிலைமையை ஆய்வு செய்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நிலைமை குறித்து கேட்டறிந்தார்.. முன்னதாக டெல்லி போலீஸ் கமிஷனர் சதீஷ் கோல்ச்சாவிடம் அமித்ஷா பேசினார்.. உளவுத்துறை இயக்குநருடன் அமித்ஷா தொடர்பில் உள்ளார்.
தேசிய பாதுகாப்புப் படை (NSG), தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் தடயவியல் துறையின் குழுக்களும் சம்பவம் நடந்த இடத்தை அடைந்தன. டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் குழுவும், CRPF டிஐஜியும் வெடிப்பு நடந்த இடத்திற்கு வந்துள்ளனர்.
டெல்லி போலீஸ் கமிஷனர் என்ன சொன்னார்?
டெல்லி போலீஸ் கமிஷனர் சதீஷ் கோல்ச்சா செய்தியாளர்களிடம் பேசிய போது “ செங்கோட்டை அருகே மாலை 6.52 மணியளவில் “சிவப்பு விளக்கில் மெதுவாக நகர்ந்த வாகனம் வாகனம் நின்றது.. அந்த வாகனத்தில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது, மேலும் வெடிப்பு காரணமாக, அருகிலுள்ள வாகனங்களும் சேதமடைந்தன. அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் சம்பவ இடத்தில் உள்ளன..” என்று தெரிவித்தார்..
நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் ஷாவும் போலீசாரைத் தொடர்பு கொண்டதாகவும், அவருடன் தொடர்ந்து தகவல்கள் பகிரப்பட்டு வருவதாகவும் கமிஷனர் மேலும் கூறினார்.
நேரில் கண்ட சாட்சிகள் என்ன சொன்னார்கள்?
“இவ்வளவு பெரிய வெடிச்சத்தத்தை நாங்கள் ஒருபோதும் கேட்டதில்லை” என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். “வெடிப்பினால் நான் மூன்று முறை விழுந்தேன். நாங்கள் அனைவரும் இறந்துவிடுவோம் என்று தோன்றியது…” என்று உள்ளூர் கடைக்காரர் ஒருவர் கூறினார்.
செங்கோட்டை அருகே வெடிப்புக்குப் பிறகு நடந்த தருணங்களை விவரித்த மற்றொரு நேரில் கண்ட சாட்சி, சாலையில் உடல் பாகங்களைக் கண்டதாகக் கூறினார். “…நாங்கள் அருகில் வந்தபோது, உடல் பாகங்கள் சாலையில் பரவியிருப்பதைக் கண்டோம். என்ன நடந்தது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை,” என்று உள்ளூர்வாசி கூறினார், பல கார்களும் சேதமடைந்தன.” என்று தெரிவித்தார்..
நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் போலீசாரை தொடர்பு கொண்டதாகவும், தொடர்ந்து தகவல்கள் அவருடன் பகிரப்பட்டு வருவதாகவும் கமிஷனர் மேலும் கூறினார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா, உ.பி, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.. முக்கிய ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்..



