கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் இரிக்கூர் பகுதியில் வசித்து வந்த சுபாஷ் என்பவர் துபாயில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தர்ஷிதாவின் (22) சொந்த ஊர் கர்நாடக மாநிலம் ஹுன்சூர் ஆகும். இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. தனது, கணவனுடன் கேரளாவில் வசித்து வந்தார் தர்ஷிதா.
அண்மையில், சுபாஷின் வீட்டில் இருந்து 30 பவுன் நகையும், சுமார் 5 லட்சம் ரூபாய் பணமும் மாயமானது. இது குறித்து இரிக்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதேசமயம், தர்ஷிதா திடீரென குடும்பத்தினர் மற்றும் காவல்துறையின் தொடர்பை முற்றிலும் துண்டித்துள்ளார். யாரும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால், தர்ஷிதா மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதே சமயம், கர்நாடக மாநிலம் சாலிகிராமத்தில் உள்ள ஒரு லாட்ஜில், பெண் ஒருவர் சடலமாகக் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், அந்த பெண் யாரென்று முதலில் அடையாளம் காண முடியவில்லை. அவரது முகம் முற்றிலும் சிதைந்திருந்தது. பின்னர் அது தர்ஷிதா என உறுதி செய்யப்பட்டது.
அதாவது, வாய்க்குள் ‘டெட்டனேட்டர்’ என்ற வெடிபொருள் வைக்கப்பட்டு, அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டிருந்தார். இது வழக்கமான கொலை அல்ல, திட்டமிட்டு, தடயங்கள் மறைக்கப்பட்ட ஒரு பயங்கர சம்பவமாக போலீசார் கருதினர். இந்தச் சம்பவத்தில் முக்கிய சந்தேகநபராக கர்நாடகாவைச் சேர்ந்த சித்தராஜு (22) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தர்ஷிதாவின் பழைய காதலர். திருமணமான பிறகும், தர்ஷிதா அவருடன் தொடர்பில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தர்ஷிதா தனது கணவனின் வீட்டிலிருந்து நகையும் பணத்தையும் திருடி, சித்தராஜுவுடன் சேர்ந்து கர்நாடகா வந்திருக்கலாம். ஆனால் அந்தப் பணத்திற்காகவே, சித்தராஜு தர்ஷிதாவை கொலை செய்து விட்டதாக போலீசார் கருதுகின்றனர்.
தர்ஷிதா உயிரிழந்த விவகாரம் மற்றும் திருட்டுச் சம்பவம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கண்ணூர் போலீசார் கர்நாடகாவில் முகாமிட்டு, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : தப்பித் தவறி இந்த வாஸ்துப்படி மட்டும் வீடு கட்டாதீங்க..!! நினைத்துப் பார்க்க முடியாத சிக்கல்கள் வரும்..!!