திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ’வெல்லும் தமிழ் பெண்கள்’ திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. இந்த மாநாட்டில் திமுக மகளிரணி சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியலமைப்பு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது..
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றி ஸ்டாலின் “ உங்களை பார்க்கவே பவர்புல்லாக இருக்கிறது.. பெண்கள் பவரால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி.. மாநாட்டை சிறப்பாக நடத்திய கனிமொழிக்கும் அவரது மகளிரணிக்கும் பாராட்டுகள்.. வரும் சட்டமன்ற தேர்தலில் தேர்தல் அறிக்கை தான் ஹீரோ.. அந்த ஹீரோவை தயாரிக்கும் பொறுப்பில் கனிமொழி இருக்கிறார்.. கனமொழி எப்போதும் புன்னகை மாறாமல் இருப்பார்.. ஆனால் நாடாளுமன்றத்தில் கர்ஜிப்பார்.. பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்.. அவர்களின் வெற்றி தான் சமூகத்தின் வெற்றி..
தொடக்கத்தில் இருந்தே திமுகவில் பெண்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.. திராவிட இயக்கத்தில் பெண்கள் அடைந்த வளர்ச்சியை மற்ற பெண்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும்.. பெண்களுக்கான உரிமைகளை மீட்டுக் கொடுத்தது திராவிட இயக்கம் தான்.. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தவர் கலைஞர்.. தமிழ்நாட்டில் தற்போது பெண் மேயர்கள் தான் அதிகம்.. உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு கிடைத்த அங்கீகாரம், சட்டமன்றம், நாடாளுமன்றத்திலும் கிடைக்க வேண்டும்.. ஒட்டுமொத்த இந்திய பெண்களின் குரலாக நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசினார்.. பெண்களுக்கு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அதிகாரம் கிடைப்பதை பாஜக விரும்பவில்லை..
இந்த கூட்டத்தில் என் அம்மாவை போல் நிறைய பேர் இருக்கிறீர்கள், எனது சகோதரிகளாக நிறைய பேர் இருக்கிறீர்கள்.. எனது மகளை போல் நிறைய பேர் இருக்கிறீர்கள்.. உங்களுக்காக பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.. இது மகளிருக்கான ஆட்சி.. பெண்கள் மன நிறைவுடன் இருக்கிறார்கள்..
இதுவரை ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் ரூ.28,000 கொடுத்திருக்கிறோம்.. 1 கோடியே 30 லட்சம் பேருக்கு ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை கொடுத்து வருகிறோம்.. மகளிர் விடியல் பயணம் மூலம் பெண்கள் பயணம் செய்வதே அவர்களுக்கு சுய மரியாதையும், தன்னம்பிக்கையும் வந்துள்ளது.. அனைத்து தரப்பு பெண்களுக்கும் இது பயனுள்ளதாக உள்ளது.. அரசுப் பள்ளியில் படிக்கும் பெண்கள் கல்லூரியில் சேருவதை ஊக்குவிக்கும் திட்டம் தான் புதுமை பெண் திட்டம்.. இதன் மூலம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.. மகனோடு சேர்ந்து கல்லூரிக்கு செல்லும் தாயை கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பார்த்தேன்.. இது தான் புதுமைப் பெண்ண் திட்டத்தின் வெற்றி..
கல்வி தான் யாராலும் திருட முடியாத சொத்து.. பெண்கள் படித்தா 3 -4 தலைமுறைகள் பயனடையும்.. கடந்த 4 ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 6 மடங்காக அதிகரித்துள்ளது.. அதில் 50% பெண்கள் தொழில்முனைவோராக இருக்கின்றனர்.. திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி.. 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு இழுத்து மூடிவிட்டது.. ஆனால் 100 நாள் திட்டத்தை நிறுத்தவில்லை, 125 நாளாக உயர்த்தப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பச்சைப் பொய் சொல்கிறார்.. கமலாலயம் கொடுக்கும் அறிக்கையை அதிமுக லெட்டர் பேடில் வெளியிடுகிறார் பழனிசாமி.. பாஜகவினரே கூச்சப்படும் அளவுக்கு முட்டுக் கொடுக்கிறார் எடப்பாடி பழனிசாமி..
திராவிட மாடல் அரசு போல பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாதனை செய்த அரசு இருக்கவே முடியாது.. இது எல்லாமே தொடக்கம் மட்டும் தான்.. இன்னும் நிறைய செய்யப் போகிறோம்.. மகளிருக்கான திட்டங்களை ஒவ்வொரு வீட்டிற்கு சென்று சேர்க்க வேண்டும்.. திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தே தீர வேண்டும்.. அடுத்த அமையக்கூடிய திராவிட மாடல் 2.0 ஆட்சியானது பெண்களுக்கான ஆட்சியாக தான் இருக்கும்..” என்று தெரிவித்தார்..



