திருவள்ளூரில் அரசுப்பள்ளியில் சுவர் இடிந்து விழந்ததில் மாணவன் உயிரிழந்த துயர சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்
திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், இன்று மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. மேலும் உயிரிழந்த மாணவர் மோகித்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அரசுப்பள்ளிகளின் கட்டுமானத்தை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யுமாறு வலியுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் இந்த துயர சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. திருவள்ளூர் அருகே அரசு பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து 7-ம் வகுப்பு மாணவன் மோகித் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்ததாக அவர் தெரிவிதிதுள்ளார்.. உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அவர், அவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்..
Read More : மாணவர்கள் உயிரோடு விளையாடும் ஸ்டாலின் மாடல் அரசு; உடனே இதை செய்யுங்க.. விளாசிய இபிஎஸ்..!



