2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் திமுக முழு வீச்சில் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது.. இந்த முறை எப்படியாவது ஆட்சி அமைக்க வேண்டும் என்று அதிமுக பாஜக கூட்டணி பணிகளை தொடங்கி உள்ளது.. குறிப்பாக பாஜக திமுகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது..
இந்த நிலையில் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தமிழகம் வந்தார்.. இதையடுத்து சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இடையே சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை நடத்தினர்.. பாஜக பொறுத்தவரை 50 தொகுதிகள் வேண்டும் என்று கேட்கப்பட்டது. ஆனால் அதிகபட்சமாக 25 தொகுதிகள் ஒதுக்கலாம் என்று அதிமுக தரப்பு கூறியதாக தெரிகிறது..
இந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. அதாவது அதிமுக – பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ்-ஐ இணைக்க பாஜக தரப்பு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.. டிடிவி, தினகரன், ஓபிஎஸ் ஆகியோருக்கான இடங்களை பாஜக ஒதுக்கும் எனவும் கூறப்படுகிறது.. என்.டி.ஏ கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த ஓபிஎஸ், டிடிவி தினகரனை சேர்த்துக்கொள்ள இபிஎஸ் ஓ.கே சொல்லிவிட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
எனினும் ஓபிஎஸ், டிடிவி, பாஜக என மூன்று தரப்புக்கும் மொத்தமாக சீட் ஒதுக்கப்பட உள்ளதாம்.. பாஜக அதிலிருந்து ஓபிஎஸ், டிடிவிக்கு இடங்களை ஒதுக்கும் என்று கூறப்படுகிறது.. அதன்படி ஓபிஎஸ்-க்கு 3 சீட்களும், டிடிவி தினகரனுக்கு 6 சீட்களும் ஒதுக்கப்பட உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது..
Read More : பொங்கல் பரிசுத்தொகை ரூ.5000..? தமிழக மக்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..



