எதிர்நீச்சல் சீரியல் இன்றைய எபிசோடில் தர்ஷன் திருமணத்தை தடுத்து நிறுத்த ஜீவானந்தம் மற்றும் பார்கவி உடன் காரில் மதுரைக்கு வந்துகொண்டிருந்த ஜனனி, இடையே போலீசாரால் நிறுத்தப்படுகிறார். போலீசார் அவர்களது காரில் சோதனை செய்ய வேண்டும் என கூறுகின்றனர். அப்போது ஜனனி எதற்காக காரில் சோதனை செய்கிறீர்கள் என கேட்கிறார்.
அப்போது தான் கேமராமேன் கெவினின் உடல் கைப்பற்றப்பட்ட விஷயத்தை கூறி இருக்கிறார்கள். ஜனனிக்கு கெவின் தான் தர்ஷன் திருமணத்தில் கேமராமேனாக இருந்தார் என்கிற விஷயம் நன்கு தெரியும். கெவின் கொலைக்கும் அறிவுக்கரசிக்கும் ஏதோ தொடர்ப்பு இருக்கு என ஜனனிக்கு சந்தேகம் ஏற்பட்டது., உடனே மண்டபத்துக்கு செல்கிறார் ஜனனி.
மறுபுறம் அன்புகரசிக்கு தர்ஷன் தாலியை கட்ட செல்கிறார். அவர் தாலி கட்ட தயங்க கதிர் அவனது கையை பிடித்து கட்ட வைக்க முயற்சி செய்ய நிறுத்துங்கள் என்ற சத்தம் வருகிறது. அதன்பின்னர் அறிவுக்கரசியை போலீஸ் கைது செய்கிறது. தர்ஷன் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று தவித்த ஜனனிக்கு போலீஸ் மூலமே ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அறிவுக்கரசி கைது செய்யப்பட்ட நிலையில், ஆதி குணசேகரனின் அடுத்த திட்டம் என்ன? தர்ஷன்–பார்கவி திருமணம் நடக்குமா? ஜீவானந்தம் தன்னை நிரபராதி என நிரூபிப்பாரா? கெவினின் கேமராவில் இருந்த வீடியோ வெளிவருமா? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் விடை, வரவிருக்கும் எபிசோடுகளில் வெளிப்படும் என ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் காத்திருக்கின்றனர்.
Read more: டிச., 5 தேதி வரை கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்! புதிய முடிவுகள் எதுவும் எடுக்காதீர்கள்!