புதுச்சேரி அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலை நோக்கிச் சூடுபிடித்துள்ள நிலையில், வன்னியர் சமூக வாக்குகளைக் குறிவைத்து திமுக தனது அதிரடி வியூகத்தை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ‘வன்னியர் பாதுகாப்பு பேரியக்கத்தின்’ தலைவரான செந்தில், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். புதுச்சேரி மாநில திமுக தேர்தல் பொறுப்பாளரும், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். ஜெகத்ரட்சகன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து, செந்திலை முறைப்படி கட்சியில் இணைத்துக்கொண்டார்.
திமுக – காங்கிரஸ் கூட்டணி இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இதற்காக மாற்றுக்கட்சிகளில் உள்ள செல்வாக்குள்ள நிர்வாகிகளையும், சமூக அமைப்புகளின் தலைவர்களையும் தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளை ஜெகத்ரட்சகன் மிக தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில், வன்னியர் பாதுகாப்பு பேரியக்கத்தின் இந்த வரவு திமுகவுக்கு சற்று பலத்தைச் சேர்த்துள்ளது.
மறுபுறம், இந்த திடீர் அரசியல் நகர்வு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதுச்சேரி மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் வன்னியர் சங்க வாக்குகள் சிதறுவது, எதிர்வரும் தேர்தலில் தங்கள் கூட்டணியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்ற கவலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
Read More : காஃபி முதல் உரங்கள் வரை..!! மத்திய பட்ஜெட் எதிரொலியால் அதிரடியாக விலை உயரும் பொருட்கள் என்னென்ன..?



