திடீர் ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் கூட்டணி அமைத்த தவெக.. எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு..?

tvk vijay n 4

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி, புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக முதலில் அறிவித்திருந்தது. வேட்பு மனு தாக்குதலுக்கு இன்றே கடைசி நாள் என்பதால் நேற்றிரவு 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை விஜய் வெளியிட்டார்..


இந்த நிலையில் திடீர் திருப்பமாக தவெக உடன் நேயம் மக்கள் கழகம் என்ற கட்சி கூட்டணி அமைத்துள்ளது.. இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் “ புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரி மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, “நேயம் மக்கள் கழகம்” நிறுவனத் தலைவர் திரு. G.நேரு (எ) குப்புசாமி MLA அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் “உருளையன்பேட்டை” மற்றும் “தட்டாஞ்சாவடி” ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணியில் சேர்ந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Read More : தவெகவில் திமுக உளவாளிகள் உள்ளனர்.. இதுதான் அவர்களின் அஜெண்டா.. சார்லஸ் மார்ட்டின் விமர்சனம்.!

RUPA

Next Post

இல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்..! மேலும் 2 எல்பிஜி கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடந்து இந்தியா வர உள்ளன..!

Mon Mar 23 , 2026
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியக் கொடியுடன் இயங்கும் இரண்டு எல்பிஜி கப்பல்களான ஜக் வசந்த் மற்றும் பைன் கேஸ், மிகவும் பதற்றமான ஹார்முஸ் நீரிணையை கடக்கத் தயாராகி வருகின்றன. இந்த இரு கப்பல்களும் பாரசீக வளைகுடாவிலிருந்து இந்தியாவை நோக்கிப் பயணித்து ஜலசந்தியைக் கடந்த பிறகு, இக்கப்பல்கள் தங்களின் எல்பிஜி சரக்குகளுடன் இந்தியத் துறைமுகங்களுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 28 அன்று மோதல் தொடங்கியதிலிருந்து, இப்பகுதியில் […]
lpg ship 2

You May Like