சட்டவிரோத பண பரிமாற்றம்: பிரபல தமிழ் நடிகை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!!

actor aruna 1

சென்னை நீலாங்கரையில் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


கடந்த 1980ல் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை அருணா. இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகமானார். கரிமேடு கருவாயன், முதல் மரியாதை உட்பட பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் கேசினோ ட்ரை பகுதியில் கணவர் தொழிலதிபர் மன்மோகன் குப்தாவுடன் வசித்து வருகின்றார்.

மன்மோகன் குப்தா பிரபல (ஆர்க்கிடெக்சர்) வீடு, பங்களாக்களில் உள்கட்டமைப்பு அலங்காரப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள அவரது சொகுசு வீடு, அலுவலகங்களில் மூன்று கார்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்மோகன் குப்தா நடத்தி வரும் நிறுவனத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கிடைத்த சில புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. நடிகை அருணாவின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more: மாதம் ரூ.250 முதலீடு செய்தால் போதும்.. லட்சத்தில் ரிட்டன்.. பெண் குழந்தைகளுக்கு செம திட்டம்..!!

Next Post

#Flash : ஹேப்பி நியூஸ்.. மீண்டும் தங்கம் விலை கிடுகிடு சரிவு.. நகைப்பிரியர்கள் நிம்மதி..

Wed Jul 9 , 2025
In Chennai today, the price of gold fell by Rs. 480 per sovereign and is being sold at Rs. 72,400.
Firefly indian family purchasing gold ornaments in jewellry with 16 9 ratio with night glit 766387 1

You May Like