SSC தேர்வர்களே கவனம்…! தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு…! ஆட்சியர் அறிவிப்பு….

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டத்தின்‌ வாயிலாக பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்படுகிறது. தற்போது தருமபுரி மாவட்ட வேலை நாடுநர்கள்‌ பயனடையும்‌ வகையில்‌ மத்திய அரசு பணியாளர்‌ தேர்வாணையம்‌ SSC CGL 2022 தேர்விற்கான காலி பணியிடங்‌களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு இணையதளத்தில்‌ விண்ணப்பிப்பத்திற்கான கடைசி நாள்‌ ஏற்கனவே முடிவடைந்து விட்டது. இதற்கான இலவச பயிற்சி வகுப்பு 28.09.2022 முதல்‌ நடைபெற்று வருகிறது. இத்தேர்விற்கு கணிணி வழியாக மாதிரி தேர்வுகள்‌ நடத்தப்படவுள்ளது.


இப்பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொள்ள விருப்பம்‌ உள்ளவர்கள்‌ https://bit.ly/3xDGUX என்ற Google படிவத்தில்‌ விண்ணப்பிக்கவும்‌. மேலும்‌ விவரங்களுக்கு தொலைபேசி எண்‌ 004342 296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்‌. இந்த போட்டித்‌ தேர்விற்கு தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள தகுதி வாய்ந்தவர்கள்‌ இலவச பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.

IMG 20221018 062223

Vignesh

Next Post

குட் நியூஸ்..! இனி இந்த சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் 5 வருடங்கள்...! மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு...!

Tue Oct 18 , 2022
வர்த்தக சான்றிதழ் செல்லுபடியாகும் காலம், 12 மாதங்களில் இருந்து 5 வருடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-இன் கீழ் வர்த்தக சான்றிதழ் முறையில் விரிவான சீர்திருத்தங்களை செப்டம்பர் 14, 2022 தேதியிட்ட அறிவிக்கையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நிலுவையில் உள்ள விதிகளில் காணப்படும் சில முரண்பாடுகள் காரணமாக வர்த்தக சான்றிதழ் குறித்து பல்வேறு விதமான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், ஏராளமான வர்த்தக […]
Driving Licence Haryana

You May Like