உத்தரபிரதேச மாநிலம் மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தின் சிவன் கோவில் வளாகத்தில் மரணக் கிணற்றில், வழக்கம்போல் மோட்டார் சைக்கிள் ஸ்டண்ட் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. இதில் ஒரு இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் வேகமாக சவாரி செய்து, சுவர் ஒட்டியே ஸ்டண்ட் காட்டிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் திடீரென அவர் கட்டுப்பாட்டை இழந்து நேராக கீழே விழுந்தார்.
இந்தக் காட்சியை நேரில் பார்த்த பார்வையாளர்கள், அதிர்ச்சி அடைந்து அலறியோடி வெளியேறினர். தலையில் பலத்த காயமடைந்த அந்த இளைஞர், உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மீண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தால் உயிரிழப்பு நிகழ வாய்ப்பிருக்கும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விபத்து நேரத்தில் பைக் ஓட்டுநர் கீழே விழுந்த பிறகும், மோட்டார் சைக்கிள் ஓடிக்கொண்டே இருந்ததால் பார்வையாளர்களிடையே மேலும் பதட்டம் ஏற்பட்டது. போலீசார் விரைந்து விசாரணையில் ஈடுபட்டு, மரணக் கிணறை நடத்தும் ஓனரிடம் விளக்கம் கேட்டனர். மேலும் இவ்வித சாகச நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம் என்று தெரிவித்தனர். இதற்காக திட்டவட்டமாக எழுத்துப்பூர்வ உறுதி பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் பொதுமக்களிடையே பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது. இளைஞர்களின் உயிரை ஆபத்தில் இட்டு செய்யப்படும் சாகசங்கள் மீது கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு அதிகரிக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Read more: “விஜய் நினைத்தது நடக்காது..” பாஜக துணைத் தலைவர் குஷ்பு பேட்டி..! என்ன சொன்னார் தெரியுமா..?