சிவகங்கை மாவட்டம் திருபத்தூர் அருகே 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டியில் திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், திருப்பூரில் இருந்து காரைக்குடி நோக்கிச் சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் 8 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் இடைகாலுக்கு அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகி மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த விபத்தின் சோகம் இன்னும் குறையாத சூழலில், சிவகங்கையில் நடந்த இந்த கோர பேருந்து விபத்து நெஞ்சை பதற வைத்துள்ளது.
Read more: மக்கள் பவன்.. “சிந்தனை மாற்றமே தேவை.. பெயர் மாற்றம் தேவையற்றது..!” – முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கு..!



