இன்னைக்கு ஒரு புடி..!! ஆட்டிறைச்சியின் இந்த பாகத்தை சாப்பிட்டால் விந்தணுக்களின் தரம் அதிகரிக்கும்..!! ஆண்களே நோட் பண்ணுங்க..!!

sex life

அசைவ உணவுப் பிரியர்களின் முதல் தேர்வாக எப்போதும் இருப்பது ஆட்டிறைச்சிதான். ருசியில் மட்டுமல்லாமல், மருத்துவ குணங்களிலும் ஆட்டிறைச்சிக்கு நிகர் வேறில்லை என்கிறது இயற்கை மருத்துவம். குறிப்பாக, உடல் சூட்டினால் அவதிப்படுபவர்களுக்கு ஆட்டிறைச்சி ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது. இது உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு, அளவற்ற புரதச்சத்துக்களையும் கொண்டுள்ளது. ஆட்டிறைச்சியின் ஒவ்வொரு பாகமும் மனித உடலின் ஒவ்வொரு உறுப்பை பலப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.


ஆண்களைப் பொறுத்தவரை, ஆட்டிறைச்சி உண்பது அவர்களது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும், இனப்பெருக்க மண்டல மேம்பாட்டிற்கும் வழிவகுக்கிறது. குறிப்பாக திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள், ஆட்டிறைச்சியை தங்களது உணவில் சேர்த்துக் கொள்வது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அதன் தரத்தை மேம்படுத்தவும் உதவும் என நம்பப்படுகிறது.

அதேபோல், ஞாபக மறதிப் பிரச்சனை உள்ளவர்கள் ஆட்டின் மூளையை சமைத்து உண்பதன் மூலம் நினைவாற்றலை மெருகேற்றிக் கொள்ளலாம். கண்களில் எரிச்சல் அல்லது சூடு இருப்பவர்கள் ஆட்டிறைச்சி உண்பது குளிர்ச்சியை தரும். உடல் உள் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கும் ஆட்டிறைச்சி பெரும் பங்காற்றுகிறது. மார்புப் பகுதியில் புண்கள் அல்லது பலவீனம் உள்ளவர்கள் ஆட்டின் இதயத்தை உண்பது உடனடித் தீர்வைத் தரும்; நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் ஆட்டிறைச்சி உண்பது அந்த உறுப்பை வலுப்படுத்தும்.

கப நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்டின் மார்புப் பகுதி இறைச்சியை மட்டும் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம். மேலும், தீராத வயிற்றுப் புண்ணால் (Ulcer) அவதிப்படுபவர்களுக்கு ஆட்டுப்பால் ஒரு மிகச்சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது. வயதானவர்கள் மற்றும் மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு ஆட்டுக்கால் சூப் ஒரு வரப்பிரசாதமாகும்; இது எலும்புகளுக்குத் தேவையான பலத்தைத் தந்து மூட்டு வலியைப் படிப்படியாகக் குறைக்கும். இப்படி ஆட்டின் தலை முதல் கால் வரை ஒவ்வொரு பாகமும் ஒரு மருத்துவப் பயனைத் தன்னுள் கொண்டுள்ளது.

Read More : மகளின் தோழியுடன் கள்ளத்தொடர்பு..!! பின்னணியில் காதலன் போட்ட பலே ஸ்கெட்ச்..!! துண்டு துண்டான தொழிலதிபரின் அந்தரங்க உறுப்பு..!!

CHELLA

Next Post

இப்படி உணவு சாப்பிடுவது உயிருக்கே ஆபத்தானது..! எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்கோங்க..!

Sun Jan 4 , 2026
உணவை நன்றாக மென்று மெதுவாகச் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நமது உடல் உயிர்வாழ்வதற்கு உணவு அத்தியாவசியமானது. ஆனால், எப்படிச் சாப்பிட வேண்டும், எவ்வளவு மெல்ல வேண்டும் என்பதில் பலர் கவனம் செலுத்துவதில்லை. மருத்துவர்களின் கூற்றுப்படி, உணவை மெதுவாக மென்று, அவசரமாக விழுங்காமல் இருப்பதுதான் நல்ல ஆரோக்கியத்தின் ஆதாரம். இன்றைய காலகட்டத்தில், நமது வாழ்க்கை முறை மிக வேகமாக மாறிவிட்டது. காலையில் எழுந்தவுடன் அலுவலகம், பள்ளி, கல்லூரி என்று ஓட […]
Eating

You May Like