உத்தப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில், திருமணமாகி 3 ஆண்டுகளாக கள்ளக்காதலனுடன் உறவில் இருந்த பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் நீலம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கும் ரவி என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதல் உறவு நீடித்து வந்துள்ளது. நீலம் அடிக்கடி தனது காதலன் ரவியுடன் தங்குவதற்காக வீட்டை விட்டு வெளியேறி வந்துள்ளார். இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு நீலம் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
நீலம் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்து கிடந்ததால், அவரது காதலன் ரவிதான் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டதாக நீலத்தின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். நீலத்தின் மைத்துனர் தர்மேந்திர குமார், காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், “என் மைத்துனி விஷம் குடித்துவிட்டார். ரவிதான் என் மைத்துனியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், போலீசார் வருவதற்கு முன்பே அவர் உடலை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்” என்று கூறியுள்ளார்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீலத்தின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நீலத்தின் மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பதை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : ஆதாரில் மொபைல் நம்பரை மாற்ற வேண்டுமா..? புது ரூல்ஸ் வந்தாச்சு..!! ரூ.75 கட்டணம் செலுத்தணும்..!!



