தவெக சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் விஜய் பங்கேற்றார்.. இந்த விழாவில் பங்கேற்ற முக்கியஸ்தர்களுக்கு தவெக தலைவர் விஜய் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “ இது அன்பும் கருணையும் கொண்ட தருணம்.. அன்பும் கருணையும் தான் அனைத்திருக்கும் அடிப்படை.. இது இரண்டும் இருப்பது தானே தாய் மனசு.. தமிழ்நாடு மண்ணும் தாய் அன்பு கொண்ட மண் தான்.. வழிபாட்டு முறைகள் மாறினாலும் நாம் அனைவரும் சகோதரர்கள் தான்.. மற்றவர்கள் நம்பிக்கையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்..
பைபிளில் நிறைய கதைகள் உள்ளது.. அதில், ஒரு இளைஞனுக்கு எதிராக தனது சொந்த சகோதரர்களே பொறாமைப்பட்டு, அவரை பாழும் கிணற்றில் தள்ளிவிட்டு, அதன்பின்னர் அவர் எப்படி மீண்டு வந்து அந்த நாட்டுக்கே அரசனாகி, தனக்கு துரோகம் செய்த தனது சகோதரர்களை மட்டுமின்றி அந்த நாட்டையே காப்பாற்றினார் என்பது போன்ற கதைகள் நிறைய உள்ளது..
இப்படிப்பட்ட கதைகள் கடவுளின் அருளின் மக்களை மானசீகமாக நேசிக்கும் அன்பும், அதற்கான வலிமையும், உழைப்பும் இருந்தாலே போதும் எப்படிப்பட்ட போரையும், பிரச்சனைகளையும் வெல்லலாம் என்பதை உணர்த்துகிறது..
நாமும் தமிழக வெற்றிக்கழகமும் சமூக சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100% உறுதியாக இருப்போம்.. அதில் எந்த ஒரு சமரசமும் இருக்காது.. மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கைகள் என்று பெயர் வைத்ததே இந்த உறுதியால் தான்.. கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும்.. அந்த ஒளி நம்மை வழிநடத்து.. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.. அனைத்து புகழும் எல்லாம் வல்ல இறைவனுக்கே.. நம்பிக்கையோடு இருங்க.. நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்.. என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் நன்றி..” என்று தெரிவித்தார்..



