திடீரென 37 கிலோ உடல் எடையை குறைத்த இளைஞர்..!! எப்படி சாத்தியம்..? பின்பற்றிய பழக்கங்கள் என்ன..?

Weight Loss 2025

சமூக வலைத்தளங்களில் ‘இந்தியன் ஃப்ளெக்ஸ்’ என்ற இளைஞன், தனது உடல் எடையை 6 மாதங்களில் 37 கிலோ குறைத்து ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஒரு காலத்தில் 112 கிலோ எடையுடன் இருந்த இவர், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார். ஜங்க் ஃபுட், எண்ணெய் உணவுகள் மற்றும் குளிர் பானங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து, தனது வாழ்க்கையை மாற்றியுள்ளார்.


உடல் எடையின் காரணமாகத் தன்னுடைய ஆடைகள் பொருந்தாமலும், நடப்பதற்கே சிரமப்பட்டபோதும், தனது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என அவர் முடிவு எடுத்தார். இந்த முடிவுக்குப் பிறகு, அவர் ஒரு திடமான ஒழுக்கத்தையும் சுயக்கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க ஆரம்பித்தார்.

முதலில், அவர் தனது உணவு முறையை மாற்றினார். எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, அதிக காய்கறிகள், பழங்கள் மற்றும் புரத உணவுகளைச் சாப்பிடத் தொடங்கினார். மேலும், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொண்டார். உணவு அளவைக் கட்டுப்படுத்திய அவர், தினமும் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் தன்னைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு, உடல் வலிமையையும், தசைகளையும் மேம்படுத்திக் கொள்ள ஜிம்மில் சேர்ந்தார். அவரது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் பலனாக வெறும் 155 நாட்களில் 37 கிலோ எடையை குறைத்து தற்போது 75 கிலோவாக உள்ளார்.

ஆரோக்கியமான உணவுமுறை, ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு ஆகியவைதான் தனது எடை குறைப்புப் பயணத்திற்கு முக்கிய காரணம் என அவர் கூறுகிறார். மேலும், எந்த ஒரு நல்ல விஷயத்தையும் தொடங்கச் சரியான நேரம் என்று எதுவும் இல்லை. நாம் இருக்கும் இடத்திலிருந்து கடினமாக உழைத்தால், இலக்கை அடைவது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Read More : அப்படிப்போடு..!! கார், ஏசி, டிவி விலை அதிரடியாக குறைகிறது..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

CHELLA

Next Post

LinkedIn-க்கு டஃப் கொடுக்கும் OpenAI..! புதிய வேலைவாய்ப்பு தளம் அறிமுகம்!

Fri Sep 5 , 2025
OpenAI என்பது அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டு நிறுவனமாகும். இது AI இன் வளர்ச்சியில் ஒரு முன்னணி நிறுவனமாகும்.. இந்த நிறுவனத்தின் chatgpt பிரபலமான AI சாட்பாட்டாக உள்ளது.. இந்த நிலையில், OpenAI, நிறுவனங்களை சரியான விண்ணப்பதாரர்களுடன் இணைக்க AI ஐப் பயன்படுத்தும் ஒரு புதிய தளத்துடன் வேலை சந்தையில் நுழையத் தயாராகி வருகிறது. OpenAI வேலைகள் தளம் என்று அழைக்கப்படும் […]
OpenAI Unveils AI Powered Jobs Platform 1

You May Like