உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் சாம்பி (35). ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நீண்ட நாட்களாக செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் சாம்பியுடன் பழகுவதை அந்த பெண் முற்றிலும் நிறுத்திவிட்டார். இதனால் சாம்பி மனஉளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் அந்த இளம்பெண் அருகே உள்ள குளத்துக்கு தனியாக சென்றார். இதனை பார்த்த சாம்பி அவரை பின்தொடர்ந்து சென்றார். யாரும் இல்லாததை உறுதி செய்து கொண்டதோடு, இளம்பெண்ணை கட்டியணைத்தார்.
அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தன்னை விடும்படி அவரிடம் கெஞ்சினார். ஆனால் சாம்பி விடவில்லை. இந்த வேளையில் இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுக்க சாம்பி முயன்றார். அப்போது கோபமான இளம்பெண் சாம்பியின் நாக்கை கடுமையாக கடித்து வைத்தார். வலியில் சாம்பி அலறிய நிலையில், இளம்பெண் அங்கிருந்து தப்பி சென்றார்.
ரத்தம் கொட்டிய நிலையில் அவர் கம்யூனிட்டி ஹெல்த் சென்டரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக கான்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: தேமுதிக – அதிமுக கூட்டணி.. ஒரே போடாய் போட்ட பிரேமலதா விஜயகாந்த்..!! யாரும் எதிர்பாரா ட்விஸ்ட்..



