உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டம் சிக்கந்திரா ராவ் பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் காணாமல் போன சம்பவம், அப்பகுதி மக்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற அந்தச் சிறுமி, மீண்டும் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு பழைய கிணற்றில், சாக்குப் பைக்குள் அடைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மிதந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், உடனடியாக சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுப் பெண் மற்றும் 17 வயது சிறுவன் மீது சந்தேகம் ஏற்பட்டது. இருவரையும் கைது செய்து விசாரித்தபோது, அவர்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். அந்தப் பெண், தனது கணவரும் மாமியாரும் வெளியூர் சென்றிருந்த சமயத்தில், தனது கள்ளக்காதலனான 17 வயது சிறுவனை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அப்போது, இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்தபோது, அந்த 6 வயது சிறுமி வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு இவர்களின் செயலை பார்த்த சிறுமி, இதை தனது தந்தையிடம் கூறப்போவதாக மிரட்டியுள்ளாள். இதனால், இருவரும் கோபத்தில் சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், உடலைச் சாக்குப் பையில் அடைத்து கிணற்றில் வீசியுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : அடுத்த பேரிடி..!! அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய ஜான் பாண்டியன்..!! எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி..!!