தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ராஜேந்திரநகர் பகுதியில் கடந்த 16ஆம் தேதி 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் புதர் அருகே கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சைபராபாத் போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், இந்த கொடூர கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொலை குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 14ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதைப் பயன்படுத்திக் கொண்ட 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அந்தப் பெண்ணை ஆட்டோவில் கடத்திச் சென்று மது மற்றும் பிரியாணி வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர், அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, ஆராம்கர் சந்திப்பில் இறக்கிவிட்டு சென்றுள்ளார்.
பின்னர், அங்கு வந்த 25 மற்றும் 26 வயதுடைய இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள், அப்பெண்ணை வலுக்கட்டாயமாக தங்கள் ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளனர். கிஸ்மத்பூர் பாலத்தின் கீழ் பகுதிக்குக் கொண்டு சென்ற இருவரும், அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்பெண் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, கோபமடைந்த இருவரும் தடிகளால் கொடூரமாக தாக்கி, அவரை கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர், உடலை அருகில் உள்ள புதரில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குற்றவாளிகள் மூவரையும் வெவ்வேறு இடங்களில் கைது செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : Headache | தலைக்கு குளித்தவுடன் தலைவலியா..? அப்படினா இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!



