2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக அரசை வீழ்த்தும் நோக்கில் பல்வேறு தேசிய மற்றும் பிராந்திய கட்சிகள் ஒன்றிணைந்து “இந்தியா” (I.N.D.I.A – Indian National Developmental Inclusive Alliance) என்ற பெயரில் ஒரு பெரிய எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்கின. இதில் காங்கிரஸ், டிஎம்.கே., ஆம் ஆத்மி, த்ரிணமூல் காங்கிரஸ், தேசிய ஜனதாதளு, சமாஜ்வாதி, சிவசேனா (உத்தவ் அணி) உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்திருந்தன.
இந்தியா கூட்டணியின் ஆரம்ப நோக்கம் 2024 மக்களவைத் தேர்தலுக்கு ஒருங்கிணைந்த எதிர்ப்புடன் போட்டியிடுவதேயாக இருந்தது. பல கட்சிகள் இதை ‘தற்காலிக கூட்டணி’ என விளக்கியிருந்த போதும், காங்கிரஸ் தலைமையில் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகள் ஒன்றாகக் கூடி அரசியல் ஆலோசனைகள், கூட்டுறவுகள் குறித்து பேசியன. நாடாளுமன்றக் கூட்டங்களிலும் “இந்தியா கூட்டணி” என்ற பெயரிலேயே ஒருமித்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில் ஆம்ஆத்மி கட்சி கூட்டணியில் இருந்து விலகுவதாக அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனால் இந்தியா கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இந்தியா கூட்டணி உடன் கைகோர்க்காமல் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட்டது. இதில் ஆட்சி இழந்தது கவனிக்கத்தக்கது.
Read more: 55 வயதிலும் இளமையாக ஜொலிக்கும் நடிகர் மாதவன்.. சீக்ரெட் என்ன தெரியுமா..? அவரே சொன்ன தகவல்