ஆவின் பால் கொள்முதல் விலை அதிரடி உயர்வு..!! தமிழக அரசு அறிவிப்பு..!! எவ்வளவு தெரியுமா?

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், ”ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9,354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.

ஆவின் பால் கொள்முதல் விலை அதிரடி உயர்வு..!! தமிழக அரசு அறிவிப்பு..!! எவ்வளவு தெரியுமா?

கடந்த 19.08.2019 முதல் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.32-ஆகவும், எருமைப்பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.41-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம், நுகர்வோர்களின் நலன் கருதி, கடந்த 16.5.2021 முதல் அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. பால்கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமே பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், பால் நுகர்வோர்களுக்கு தரமான பாலை நியாயமான விலையில் விற்பனை செய்வதுமாகும். இந்நிலையில், இடுபொருட்கள் விலையேற்றம், உற்பத்தி செலவினம் ஆகியவை கூடியுள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் பால்கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆவின் பால் கொள்முதல் விலை அதிரடி உயர்வு..!! தமிழக அரசு அறிவிப்பு..!! எவ்வளவு தெரியுமா?

அதன்படி, பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 உயர்த்தி, ரூ.32-லிருந்து ரூ.35 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி. ரூ.41-லிருந்து ரூ.44 ஆகவும் வழங்கப்படும். நாளை முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும். இந்த கொள்முதல் விலை உயர்வால், சுமார் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக பலனடைவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

மாத சம்பளம் ரூ.2.40 லட்சம் வரை..!! மத்திய அரசு வேலை..!! விண்ணப்பிக்கலாம் வாங்க..!!

Fri Nov 4 , 2022
மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது பல்வேறு சிறப்புப் பிரிவுகளில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் ACMO (மருத்துவமனை நிர்வாகம்), தலைமைப் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள்… பணியின் பெயர் காலியிடங்கள் சம்பள விவரம் Sr. MO 10 ரூ.70,000 – 2,00,000/- Assistant Chief Medical Officer 1 ரூ.90,000 – 2,40,000/- Chief Engineer (Marine) […]
central govt jobs 1 1598945180

You May Like