இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஒரு மசூதியில் இன்று தொழுகை நடைபெறும் போது அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.. இந்த தொடர் குண்டுவெடிப்புகளில் சுமார் 54 பேர், பெரும்பாலும் மாணவர்கள், காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் சிறிய அளவு காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
மசூதியில் தொடர் வெடிப்புகள்
ஜகார்த்தாவின் கேலபா காடிங் பகுதியில் உள்ள கடற்படை வளாகத்திற்குள் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியான SMA 27 மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
போலீசார் விளக்கம் – விளையாட்டு துப்பாக்கிகள் மீட்பு
வெடிப்பு எதனால் ஏற்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை என்று ஜகார்த்தா காவல் ஆணையர் அசெப் எடி சுஹெரி தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அங்கு அன்டி-பாம் படை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், அந்த மசூதியில் இருந்து ஒரு விளையாட்டு துப்பாக்கி மற்றும் சில விளையாட்டு ரைஃபிள்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் “வெடிப்பின் காரணத்தை கண்டறிய போலீசார் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் பணியை முடிக்கட்டும்… அதன் பிறகு முடிவுகளை மக்களிடம் தெரிவிப்போம்.” என்று தெரிவித்தார்..
முன்னதாக கப்பல் தளத்தில் வெடிப்பு – 10 பேர் பலி
இதற்கு சில நாட்களுக்கு முன்பு, அக்டோபர் 15 அன்று, இந்தோனேசியாவின் பட்டம் தீவில் உள்ள கப்பல் திருத்த நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்திலும் வெடிப்பிலும் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர்; மேலும் 21 பேர் காயமடைந்தனர்.
அதிகாரிகள் இதுகுறித்து “ கச்சா பனை எண்ணெய் கப்பலின் எரிவாயு தொட்டியில் திருத்தப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது தீப்பற்றி, பின்னர் பெரும் வெடிப்பு ஏற்பட்டது. தீயைத் தொடர்ந்து ஏற்பட்ட பெரிய வெடிப்பு காரணமாக மற்ற தொழிலாளர்கள் பதற்றத்தில் ஓடினர்,” என்று தெரிவித்தார்..
Read More : ரஷ்யாவில் ‘பால் வாங்க’ சென்ற இந்திய மாணவர் மாயம்.. உடல் சடலமாக மீட்பு.. பகீர் சம்பவம்..!



