விஜய்யின் தவெக 2026-ல் தனது முதல் தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்காக தவெக தலைவர் விஜய் கடந்த 13-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.. வார இறுதி நாட்களில் சனிக்கிழமைகளில் மட்டும் விஜய் பிரச்சாரம் செய்து வருகிறார்.. திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய விஜய் கடந்த வாரம் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.. இந்த நிலையில் விஜய் இன்று நாமக்கல், கரூர் மாவட்டங்களில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி சென்ற அவர், திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக் நாமக்கலுக்கு செல்கிறார்.. விஜய் சுற்றுப்பயணத்திற்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய் வாகனத்திற்கு முன்னால் ஒரு வாகனமும், அவரின் வாகனத்திற்கு பின்னால் 2 வாகனங்களும் சென்று கொண்டிருக்கின்றன.. பவுன்சர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கியது..
முன்னாள் சென்ற கார் மீது பவுன்சர்கள் சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பவுன்சர்கள் சென்ற காரின் முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்தது.. எனினும் இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.. நல்வாய்ப்பாக அனைவரும் உயிர் தப்பினர்.. விபத்தில் சிக்கிய காரில் இருந்தவர்கள் வேறு வாகனம் மூலம் விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து செல்கின்றனர்..
Read More : என்ன ஆச்சு? சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!



