நடிகர் தனுஷ் குடும்பத்துடன் சில நாட்கள் மகிழ்ச்சியாக கழித்து வர துபாய்க்கு சென்றுள்ளதாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் தனுஷ் ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கழிக்க திட்டமிட்டுள்ளார். அதே நேரத்தில் அடுத்த படத்திற்காகவும் பணியில் ஈடுபட்டுள்ளார்.இதற்காக தனுஷ் குடும்பத்துடன் துபாய்க்கு சென்றுள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
சில நாட்கள் அங்கு கழித்த பின்னர் மீண்டும் சென்னைக்கு திரும்ப உள்ளார் தனுஷ். இந்நிலையில் துபாய் விமான நிலையத்தில் நடிகை மாளவிகா ஸ்ரீநாத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. துபாயில் நடிகர் தனுஷை கண்ட பலரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நடிகை மாளவிகாவும் மகிழ்ச்சியுடன் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.

கடந்த சில மாதங்களாக விவாகரத்து விவகாரத்தில் களையிழந்து காணப்பட்ட தனுஷ் குடும்பம் சமீபத்தில் ஒன்று சேர்ந்தவுடன குதூகலம் பிறந்துள்ளது. எனவே அந்த சந்தோஷத்தையும் சேர்த்து கொண்டாட சரியான நேரம் கிடைத்துள்ளது.