கேப்டனுக்கு பக்கபலமாக இருந்த நடிகர் மீசை ராஜேந்திரன் தேமுதிகவில் இருந்து திடீர் விலகல்..!

meesai rajenthiran

தேமுதிக வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. இந்நிலையில், தேமுதிக-வின் முக்கிய நிர்வாகியான நடிகர் மீசை ராஜேந்திரன், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நடிகர் மீசை ராஜேந்திரன் இளம் பருவம் முதலே விஜயகாந்தின் தீவிர ரசிகர். பார்ப்பதற்கு மிரட்சியான தோற்றத்தில் முறுக்கு மீசையுடன் காட்சியளிக்கும் ராஜேந்திரநாத், விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கியவுடன் அதில் உறுப்பினராக இணைந்துக் கொண்டார். கட்சிப்பணிகளில் இன்னும் தீவிரமாக இயங்கத் தொடங்கிய அவருக்கு இளைஞரணியில் மாநில அளவிலான பதவியை விஜயகாந்த் வழங்கினார்.

தேமுதிக சார்பில் கடந்த மூன்று சட்ட சபை தேர்தல்களிலும் போட்டியிட்ட மீசை ராஜேந்திரனுக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறாது. இந்த நிலையில்தான், மீசை ராஜேந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், கேப்டன் மன்றத்தில் 31ஆண்டுகளும் தேமுதிகவில் 21 ஆண்டுகளும் உழைத்து இருப்பதாக மீசை ராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார். கேப்டன் விஜயகாந்த் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து அவரோடு பயணித்து வந்தார். விஜயகாந்த் மறைவுக்கு பிறகு பிரேமலதா விஜயகாந்த்க்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்து வந்ததார். தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் மீசை ராஜேந்திரன் கட்சியில் இருந்து விலகியது தேமுதிகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Read more: கணவரை ‘காமவெறியர்’ என சித்தரித்து பொய் குற்றச்சாட்டு.. மனைவியின் செயலுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்!

English Summary

Actor Meesai Rajendran, who was a supporter of the captain, suddenly leaves DMDK..!

Next Post

Flash : தமிழ்நாடு தலைமை செயலாளர் அதிரடி மாற்றம்.. தேர்தல் ஆணையம் உத்தரவு..!

Wed Apr 8 , 2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன.. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் ஆணையம் வசம் சென்றுள்ளது. ஏதாவது மிக முக்கிய பிரச்சனை நடந்தால் மட்டுமே, அரசு உயரதிகாரிகளை, முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம்.. அதவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்று […]
tn govt 20251 1

You May Like