தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இதை தொடர்ந்து எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலாயுதம், பிரியாணி, அரண்மனை 1, சிங்கம் 2 என பல படங்களில் நடித்தார்..
நடிகை ஹன்சிகா மோத்வானி தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை கடந்த 2022-ம் ஆண்டு திருமண செய்து கொண்டார்.. நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர்.. இதில் மெஹந்தி, சங்கீத் மற்றும் ஹால்டி உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
எனினும் ஹன்சிகாவின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து பல திருமண புகைப்படங்கள் நீக்கப்பட்டதால், அவர் தனது கணவரை பிரிந்து செல்ல வாய்ப்புள்ளதாக வதந்திகள் பரவத் தொடங்கின. திருமணமான முதல் ஆண்டில் சில பிரச்சினைகளை சந்தித்ததால் இந்த ஜோடி தங்கள் உறவை முறித்துக் கொண்டது.
தனிப்பட்ட சவால்களை சந்தித்த போதிலும் ஹன்சிகா மோத்வானி தனது தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.. இதனிடையே நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் தொழிலதிபர் சோஹைல் கதுரியா ஆகியோர் நான்கு வருட திருமணத்திற்குப் பிறகு பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர். இந்த ஜோடி பரஸ்பர சம்மதத்தின் மூலம் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த நிலையில் மும்பை நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உள்ளது.
இரு தரப்பினரும் பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் தங்கள் திருமணத்தை முடிக்க முடிவு செய்துள்ளதாகவும், அதை அவர்கள் இருவரும் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. எனினும் கணவர் சோஹேலிடம் இருந்து விவாகரத்து பெற்ற ஹன்சிகா ஜீவனாம்சமாக எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டார்..
Read More : திடீர் ட்விஸ்ட்..! NDA கூட்டணியில் விஜய் இணைகிறாரா..? எல். முருகன் சொன்ன பரபரப்பு பதில்..!



