நடிகையை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டுள்ளார்..
கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி பிரபல நடிகை கேரவனில் சென்று கொண்டிருந்த போது, காரில் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. கேரளாவில் பிரபல நடிகையை 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி பிரபல நடிகை கேரவனில் சென்று கொண்டிருந்த போது, காரில் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
இதுகுறித்து நடிகை அளித்த புகாரின் பேரில் மாநில குற்றப்புலன் விசாரணை பிரிவு காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.. விசாரணையில் சுனில் குமார் உள்ளிட்ட சிலர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.. அவரை போலீசார் கைது செய்தனர்.. இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப்புக்கும் நடிகைக்கும் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக திலீப் திட்டம் தீட்டி நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரியவந்தது.. நடிகர் திலீப், சுனில் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.. இந்த வழக்கு எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.. எனினும் இந்த வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும், திட்டமிட்டு தன்னை சிக்க வைத்ததாகவும் திலீப் கூறியிருந்தார்..
இது தொடர்பாக நடிகர் திலீப் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது..
8 ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. அதன்படி இந்த வழக்கில் இருந்து நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டுள்ளார்.. இந்த வழக்கில் நடிகர் திலீப் ஏ8 குற்றவாளி என்பதால் அவரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. திலீப் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. 8 பேர் மீது நடைபெற்று வந்த இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.. நடிகர் திலீப் உள்ளிட்ட இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளது..
Read More : ஹோட்டல்களில் ஆதார் அட்டை யூஸ் பண்றீங்களா? நகல்களுக்கு குட்பை சொல்லுங்க! அரசின் புதிய விதி!



