நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் புகார் அளித்திருந்த நடிகை விஜயலட்சுமி, புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “இலங்கையில் தமிழர்களுக்காக பிரபாகரன் உயிரை கொடுத்து போராடிக்கொண்டு இருந்தபோது, இலங்கையில் தமிழர்கள் எல்லாம் செத்துக்கொண்டு இருந்த போது, இங்க என் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டு, குடித்துக்கொண்டு ஆட்டம்போட்டுக்கொண்டு எல்லாத்தையும் பண்ணிட்டாரு.
தலைவர் பிரபாகரனுடைய மகன் பாலச்சந்திராவின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை சைட் அடித்துக் கொண்டு அந்த பிள்ளையின் வாழ்க்கையை சீரழிச்சாச்சு.. இப்போ 16 வருஷமா இருந்த இந்த வழக்கில் வந்து ஆளுங்கட்சி எடுத்து அதை என்ன என்று பார்த்துக்கொண்டு இருந்த போது நேர்மையாக ஒரு தலைவனா அதை கையாள முடியாமல், சுப்ரீம் கோர்ட்டுக்கு ஓடிப்போயி வாய்தா வாங்கிவிட்டு, இப்போ குரங்கு மாதிரி மரம் ஏறிக்கொண்டு இருக்கிறார்..
மரம் ஏறிக்கொண்டு, கள்ளு குடிங்க.. அத குடிங்கன்னு கூத்து அடிச்சுட்டு இருக்கிறார்.. சீமானிடம் சொல்கிறேன்.. அடுத்த மாதம் சுப்ரீம் கோர்ட் கேஸ் இருக்கிறது. உங்களுக்கு அப்பப்போ மறந்துவிடும். என் முகத்தை பார்த்தால் தான் உங்களுக்கு நினைவு வரும்.. அய்யோ இப்படி வழக்கு ஒன்னு இருக்குதுல்ல என்று.. இப்போ மரம் ஏறிக்கொண்டு இருக்கீங்க அல்லவா, இந்த வீடியோவை அப்படியே சுப்ரீம் கோர்ட்டில் காண்பித்துவிட்டு, எல்லாரும் நல்லது சொல்லிக்கொடுக்கும்போது, இவர் ஒருவர் தான் தப்பு தப்பாக சொல்லி கொடுப்பார்.. கள்ளு குடிங்க.. அப்புறம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டு அவன் தம்பிகளிடம் சொல்லுவார்.. இப்படி செய்தால் தான் பேமஸ் ஆக முடியும் என்னை மாதிரி என்று.. இப்படி பண்ணுற கூத்துகளை எல்லாம் சுப்ரீம் கோர்ட்டில் போட்டு காண்பிப்பேன்.
மரம் ஏறுங்க.. இன்னும் என்னென்னல்லாம் ஏற முடியுமோ அதை எல்லாம் ஏறுங்க.. இன்னும் என்னென்ன அட்டகாசம் பண்ண முடியுமோ அதை எல்லாம் செய்யுங்க.. அப்போதான் இந்த வீடியோ எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு போய் சுப்ரீம் கோர்ட்டில் காட்டிவிட்டு, உங்களுக்கு என்ன பண்ண முடியுமோ அதை செய்ய முடியும்” என அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.