சினிமா என்பது கவர்ச்சிகரமான வெகுஜன ஊடகம் என்றாலும், வெளியில் தெரியாத பல இருண்ட பக்கங்களும் உண்டு. சில நடிகர், நடிகைகள் உச்சத்தில் இருந்தாலும் திடீரென சரிந்து விடுகின்றன. அந்த வகையில், சினிமா உலகில் சரிந்த ஒரு நடிகையின் வாழ்க்கை பயணம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
அந்த நடிகையின் பெயர் சுசித்ரா சென். இவர், இந்திய சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். 1931ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி, இப்போது வங்காளதேசத்தில் உள்ள பப்னாவில் பிறந்த சுசித்ரா சென், தனது இளமைக்காலத்திலேயே சினிமாவைப் பற்றிய ஆர்வத்தை வளர்த்துக்கொண்டவர். 1952-ல் வெளியான ‘சேஷ் கோதே’ என்ற பெங்காலி திரைப்படம் அவரை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியது.
பெங்காலி மொழிப் படங்களின் வழியாக தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிய அவர், விரைவில் பாலிவுட்டின் கதாநாயகியாக மாறினார். 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, திரைத்துறையில் தனி இடத்தை பிடித்தவர். 1972-ல் பத்ம ஸ்ரீ விருது பெற்றார்.
விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் சாதித்த ஆனந்தி போன்ற படங்கள், அவரது நடிப்புத்திறனைத் தலைசிறந்த உயரத்திற்கு கொண்டு சென்றன. அதனைத் தொடர்ந்து, 1978-ல் வெளியான ‘பிரணய் பாஷா’ என்ற திரைப்படம் அவரின் கடைசி படமாகியது. இந்த படம் தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து, திரைத்துறையிலிருந்து அவர் முழுமையாக விலகினார்.
1963-ல், ‘Saat Pake Bandha’ என்ற பெங்காலி படத்துக்காக மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகை விருது பெற்றார். இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் இந்திய நடிகையாகும் இவர் தான். இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்ட சுசித்ரா செனின் வாழ்க்கை, திரைத்துறையிலும் குடும்பத்திலும் சமநிலை கொடுக்க முயற்சித்த போராட்டமாகவே இருந்தது. அவரின் கணவரும், குடும்பத்தினரும் முதலில் உறுதுணையாக இருந்தபோதிலும், தன் குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க முடியாத நிலை வந்தது.
இந்நிலையில், கணவன் – மனைவி இடையே தூரம் அதிகரித்து சண்டைகள் தொடங்கின. கணவர் மதுவுக்கு அடிமையாகி, சுசித்ராவை விட்டு அமெரிக்கா சென்றார். இதற்கிடையே, கணவர் 1970இல் இறந்துவிட்டார். இதனால், சுசித்ரா படிப்படியாக சினிமாவில் இருந்து விலகினார். அவர் 36 ஆண்டுகளாக ஒரு அறையில் தன்னைப் பூட்டிக் கொண்டார். உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. இறுதியாக சுசித்ரா சென் தன்னுடைய 83 வயதில் அதே இருண்ட அறையில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.



