கரூர் சம்பவம் குறித்து மௌனம் கலைத்த ஆதவ் அர்ஜுனா.. கடைசியில் சொன்ன அந்த வார்த்தை..! 

Adhav Arjuna 1

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா தலைமறைவாகி விட்டதாக கூறபட்ட நிலையில், மெளனம் கலைத்துள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன்.


இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளது. மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்து வருகிறேன். ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் தற்கொலையில் பார்த்தபோதே உணர்ந்தவன். அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளது இந்த மரணங்கள்.

இந்த நிமிடம் வரை இந்த துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்த குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள். அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இப்போது இல்லை.

இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன். துயரமும், துக்கமும் மட்டுமே என் மனதைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ளேன்”. ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்!’ என்று தெரிவித்துள்ளார்.

Read more: அபாய கட்டத்தில் ரேவதி.. கலங்கி நிற்கும் கார்த்தி.. காளியம்மாள் போடும் புது ப்ளான்..!! பரபரக்கும் கார்த்திகை தீபம் சீரியல்..

English Summary

Adhav Arjuna broke his silence on the Karur incident.. that last word he said..!

Next Post

இனி அனைவருமே கார் வாங்கலாம்..!! மாதம் ரூ.1,999 செலுத்தினால் போதும்..!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மாருதி..!!

Mon Sep 29 , 2025
மத்திய அரசு தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் செப்.3ஆம் தேதி நடத்திய 56-வது கூட்டத்திற்குப் பிறகு, இந்தியாவில் புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ளது. வரி விகிதங்கள் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டதால், கடந்த 22ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த இந்த மாற்றத்தால், அத்தியாவசியப் பொருட்கள் முதல் கார்கள் வரை அவற்றின் விலைகள் அதிரடியாக குறைந்துள்ளன. இந்த விலை குறைப்பின் மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் […]
Maruti 2025 1

You May Like