சன் டிவியின் பிரபல சீரியல் “எதிர்நீச்சல் தொடர்கிறது” இப்போது திருப்பங்களால் ரசிகர்களை அதிரவைத்து வருகிறது. நேற்றைய எபிசோட்டில் தர்ஷன், பார்கவி இருக்கும் ரூம் கதவை தட்டி கதிர் கலாட்டா செய்ய, சக்தி, ஜனனி உள்ளிட்ட அனைவரும் பஞ்சாயத்து செய்கிறார்கள். அந்த வேளையில் பார்கவி வெளிவர, விசாலாட்சி அவளை “வாம்மா மகாராணி” என்று கேலி செய்கிறாள். இதனால் நந்தினி கடுப்பாகி “எங்க மேல உங்க கோபம் எல்லாம் இந்த பிள்ளையிடம் கொட்டாதீங்க” என்று எதிர்த்து, பார்கவியை மாடிக்கு அழைத்துச் செல்கிறாள்.
அதே நேரத்தில் சக்தி–ஜனனி ஜோடி, கெவினின் நண்பனை சந்திக்கச் செல்கிறார்கள். அவனிடம் “குணசேகரனின் வீடியோ எங்கே?” என்று கேட்டு மிரட்டுகிறார்கள். கெவினின் நண்பன் பயந்து “எதுவும் தெரியாது” என சமாளிக்க முயல்கிறான். ஆனால் சக்தி, “இந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்கணும்னா வீடியோ கொடு” என அழுத்தம் கொடுக்கிறார். இறுதியில் அவன் “நான் யோசிச்சு சொல்றேன்” என பதிலளிக்க, அவர்கள் “நாளை இதே நேரம் முடிவு சொல்லு” என கூறி செல்கிறார்கள்.
இதனையடுத்து அவர்கள் வீட்டுக்கு வர்ற, இவன் ஏதோ திருட்டு வேலை பண்றான். ஆனால் என்ன செய்றான் தான் தெரியலை என ஞானத்திடம் சொல்கிறான் கதிர். ஞானம், இனிமே ஆடுறதுக்கு என்ன இருக்கு என சக்தியிடம் கேட்க, அவர் இனிமே தான் மொத்த ஆட்டமும் ஆரம்பம், கூட்டத்தோட உள்ள போகப்போறீங்க பாருங்க என சவால்விடுகிறார். அப்போது அங்கு இருக்கும் தர்ஷனை பார்த்து, உன்னெல்லாம் நசுக்கி போட்டு போயிட்டே இருப்பேன் என கதிர் மிரட்ட, உன்னால ஒரு மண்ணும் பண்ண முடியாது என பதிலடி கொடுக்கிறார் தர்ஷன்.
இன்றைய எபிசோட்டில் கரிகாலன் வீட்டுக்கு வந்து “ஆதி குணசேகரன் காணாமல் போயிருக்கிறார்” என அதிர்ச்சி தகவல் தெரிவிக்கிறார். இதனால் கதிர், ஞானம் ஆகியோர் பதற்றமடைந்து, அவரை தேடுவதற்காக கிளம்புகிறார்கள். இதற்கிடையில், அஸ்வினிடம் வீடியோ ஆதாரம் வாங்க ஜனனி மற்றும் சக்தி இருவரும் சென்று காத்திருக்கின்றனர். ஆனால் ஒரு மணிநேரம் கடந்தும் அஸ்வின் வரவில்லை. இதனால் கவலையடைந்த ஜனனி, “அவன் வருவானா அல்லது எங்காவது தப்பிச்சுட்டானா?” என கேட்கிறாள். அதற்கு சக்தி, “நிச்சயமாக வருவான், காத்திரு” என உறுதி அளிக்கிறார்.
அஸ்வின் நீண்ட நேரம் ஆகியும் வராததால், குணசேகரன் அவனை கிட்னாப் செய்திருப்பாரா? என்ற சந்தேகம் எழுகிறது. மேலும், அவர் லெட்டர் விவகாரத்தில் தொடர்புடைய பெண்ணை சந்திக்க இராமேஸ்வரம் சென்றிருக்கலாம் என்ற வாய்ப்பும் இருக்கிறது. அல்லது கைதுக்கு பயந்து அவர் தலைமறைவாகி இருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது. இந்நிலையில், ஆதி குணசேகரனின் அடுத்த முடிவு என்ன? அஸ்வின் உயிருடன் திரும்புவாரா? வீடியோ ஆதாரம் கைக்கு வருமா? என்பதற்கான பதில் வரவிருக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட்களில் தெரியவுள்ளது.
Read more: 200 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி நாளில் உருவாகும் யோகம்.. இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்!