Breaking : நீண்ட இழுபறிக்கு பின் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.. எத்தனை தொகுதிகள்..?

dmk cong

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் சூடுபிடித்துள்ளது.. ஆளுங்கட்சியான திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.. திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தாலும் காங்கிரஸ் கட்சி மட்டும் எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த முறை அதிக குடைச்சல் கொடுத்து வருகிறது.


முதலில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கோஷம் எழுப்பியது.. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறிவிட்டார்.. ஆனால் 40 தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.. ஆனால் திமுக தலைமையோ 25 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமே தர முடியும் என்று கூறிவிட்டது..

காங்கிரஸ் இதை ஏற்றுக்கொள்ளாத நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.. இந்த சூழலில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ஆலோசனை நடத்தினர்..

இந்த சூழலில் தான் கூட்டணியை தக்கவைக்க, கடைசி வாய்ப்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று சந்தித்து பேசினார்.. அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையும் உடனிருந்தார்..

இந்த நிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.. சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழுவினர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.. முதல்வர் மு.க ஸ்டாலினுடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.. அப்போது திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.. ஒருவழியாக நீண்ட இழுபறிக்கு பின் திமுக – காங்கிரஸ் கூட்டணி இறுதியாகி உள்ளது.. காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்களவை சீட் வழங்க திமுக ஒப்புதல் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது..

RUPA

You May Like