விஜய்யின் தவெக 2026-ல் தனது முதல் தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்காக தவெக தலைவர் விஜய் கடந்த 13-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.. வார இறுதி நாட்களில் சனிக்கிழமைகளில் மட்டும் விஜய் பிரச்சாரம் செய்து வருகிறார்.. திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய விஜய் கடந்த வாரம் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்..
நாமக்கல் நகரில் கே.எஸ் திரையரங்கம் அருகே விஜய் மாபெரும் தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் உரையாற்றினார்.. எப்போதும் போல் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் கொள்கை என்ற பெயரில் கொள்ளையடித்து வருவதாகவும் விமர்சித்தார்..
அதே போல் அதிமுக – பாஜக கூட்டணியையும் விஜய் இன்று விமர்சித்தார்.. அப்போது “ மூச்சுக்கு 300 தடவை அம்மா, அம்மா என்று சொல்லிக் கொண்டு, ஜெயலலிதா மேடம் சொன்ன விஷயங்களை மறந்துவிட்டு, பொருந்தா கூட்டணியை அமைத்துக் கொண்டு, தமிழ்நாட்டின் நலனுக்காக பாஜக உடன் கூட்டணி அமைத்தோம் என்று சொல்லிக் கொள்கிறார்களே.. அவர்களை மாதிரியும் நாம் இருக்க மாட்டோம்.. இந்த பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்கள்? நீட்டை ஒழித்துவிட்டார்களா? கல்விக்கு தேவையான நிதியை ஒதுக்கிவிட்டார்களா? இல்லை தமிழ்நாட்டிற்கு தேவையான எல்லா விஷயங்களையும் செய்துவிட்டார்களா? அப்புறம் எதற்கு இந்த சந்தரப்பவாத கூட்டணி என்று நான் கேட்கவில்லை.. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டர்கள் கேட்கின்றனர்..” என்று தெரிவித்தார்..
Read More : மக்களே ஜாக்கிரதை.. திமுகவுக்கு ஓட்டுப்போட்டால் அது பாஜகவுக்கு ஓட்டுப் போட்ட மாதிரி.. விஜய் பேச்சு!