மீண்டும் மீண்டுமா..? விஜய் வாகனத்தை பின் தொடர்ந்த போது விபத்து.. அடுத்தடுத்து கீழே விழுந்த தவெகவினர்..!

tvk vijay 4

தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சதவெக தலைவர் விஜய் இன்று நெல்லையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக சாடினார்.. மேலும் “ 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழக்கமான தேர்தல் இல்லை.. இது ஒரு அதிசய தேர்தல்.. நம்ம தவெக ஆட்சி அமைந்தால் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் நல்லா இருப்போம்.. விவசாயிகள், மீனவர்கள் நல்லா இருப்போம்.. அதனால் தான் பார்த்து பார்த்து வாக்குறுதிகளை அறிவித்து வருகிறோம்..


செய்ய முடியாததை சொல்ல மாட்டோம்.. செய்வதை மட்டுமே சொல்வோம், சொல்லாததையும் செய்வோம்.. மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொட வேண்டிய அவசியம் இல்லை.. ஆனால் இப்போது ஆண்டு கொண்டிருப்பவர்கள் இதற்கு முன்பு ஆண்டவர்கள், மக்கள் காசில் இருந்து ஒரு பைசா கூட தொட மாட்டேன் என்று தில்லாக சொல்ல முடியுமா..? என்னை எதிர்ப்பவர்கள் தில்லாக, கெத்தாக கட்ஸாக இதை சொல்ல முடியுமா..?

உங்களுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்திருக்கிறேன்.. அனைத்து வலிகளையும் தாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன்.. ஒருநாளும் உங்களை ஏமாற்றமாட்டேன்.. 4 முனை போட்டி, 40 முனை போட்டி திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டியே.. இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். விசில் சின்னத்திற்கு ஓட்டுப் போடுங்க.. உங்க விஜய் நான் வரேன்.. விசில் அடிக்க ரெடியா..? நம்பிக்கையோடு இருங்க.. நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்..” என்று தெரிவித்தார்..

நெல்லையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய் அதன் தொடர்ச்சியாக ரோடு ஷோ நடத்தினார்.. அப்போது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கொடுத்த பரிசை விஜய் வாங்கிக் கொண்டார்..

விஜய் செல்லும் வழியெங்கும் தவெகவினர் அவரின் வாகனத்தை தவெகவினர் பின் தொடர்ந்து சென்றனர்.. அப்போது அருகில் இருந்து சாலை தடுப்பு மீது மோதியதில் அடுத்தடுத்து பல வாகனங்கள் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.. ஆபத்தை உணராமல் பல தொண்டர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.

முன்னதாக தூத்துக்குடியில் இருந்து விஜய் நெல்லை சென்ற போதும் தவெக தொண்டர்கள் அவரின் வாகனத்தை பின் தொடர்ந்தனர்..  விஜய் வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தவர்கள் அடுத்தடுத்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.. 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் அடுத்தடுத்து விழுந்ததில் பலருக்கு காயம் ஏற்பட்டது..

Read More : “என்னை எதிர்ப்பவர்களால் இதை தைரியமா, கெத்தா சொல்ல முடியுமா..? திமுக, அதிமுகவுக்கு விஜய் சவால்..!

RUPA

Next Post

போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் தொடரும் தாக்குதல்..! மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம்..! என்ன நடக்கிறது..?

Wed Apr 8 , 2026
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப பிறகு மீண்டும் தாக்குதல் நடைபெற்று வருகிறது.. ஈரானின் லவான் தீவில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்குதலுக்கு உள்ளானதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்த அறிக்கை கூறியது. இருப்பினும், இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்று அது […]
iran isareal war

You May Like