தமிழகத்தில் இன்றுடன் நிறைவடைகிறது அக்னி நட்சத்திரம்!!

தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தொடங்கி 25 நாட்கள் நீடிக்கும். அக்னி நட்சத்திர நாட்களில்  வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.  இந்த ஆண்டு மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியது. 


அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் பல  மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து இனி வெப்பம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1newsnationuser5

Next Post

முதல் நாளே செங்கோல் வளைந்து விட்டது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Sun May 28 , 2023
நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட செங்கோல் முதல் நாளே வளைந்து வளைந்துவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக எம்பியும், மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று புதிய நாடாளுமன்றத்தை நோக்கி சென்ற வீராங்கனைகளை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய […]
14002309 cm2

You May Like